சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாமா? ஆலிவ் எண்ணெய் நன்மை, தீமைகள் மற்றும் பயன்படுத்தும் குறிப்புகள் இதோ
ஆலிவ் எண்ணெய் டயபிடிஸ், இதய நோய்கள் மற்றும் பிற நாள்பட்ட நோய் பாதிப்பு நிலைமைகளை தடுக்க உதவுகிறது. இருப்பினும், அதை ஆரோக்கியமான வழிகளில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து சில முக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

இந்திய சமையலறைகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எள்ளு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் வரிசையில் தற்போது ஆலிவ் எண்ணெய் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. இதற்கான பல்வேறு நன்மை தரக்கூடிய காரணங்களும் உள்ளன. ஆலிவ் எண்ணெய், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இதய ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. இந்த எண்ணெய் படிப்படியாக பாரம்பரிய சமையல் எண்ணெய்களை ஆரோக்கியமான மாற்றாக மாற்றுகிறது.
புனேவின் ஜூபிடர் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் ஸ்வதி சாந்தன் HT லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில், "ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (MUFA), வைட்டமின் E, வைட்டமின் K மற்றும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் இதய பிரச்னைகள், டைப் 2 நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற வாழ்க்கை முறை நோய்களைத் தடுப்பதில் நன்மை பயப்பதாக கூறப்படுகிறது"
இதய நோய்கள், நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பு:
"எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இருதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து ஒரு நபரைப் பாதுகாக்க உதவியாக இருக்கும். இவை தொற்றா நோய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.