Tamil News  /  Lifestyle  /  Is Jaggery A Good Sugar Substitute For Diabetics?
சர்க்கரை நோயாளிகள் ஜீனிக்குப் பதிலாக வெல்லத்தை சாப்பிடுவது நல்லதா?
சர்க்கரை நோயாளிகள் ஜீனிக்குப் பதிலாக வெல்லத்தை சாப்பிடுவது நல்லதா?

Diabetic Care:சர்க்கரை நோயாளிகள் ஜீனிக்குப் பதிலாக வெல்லத்தை சாப்பிடுவது நல்லதா?

18 March 2023, 22:18 ISTI Jayachandran
18 March 2023, 22:18 IST

சர்க்கரை நோயாளிகள் ஜீனிக்குப் பதிலாக வெல்லத்தை சாப்பிடுவது நல்லதா? அல்லது கெட்டதா? என்ற விஷயம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்புகளைத் தவிர்ப்பது பெரும்பாலும் சவாலான சூழ்நிலையாக மாறும். நீரிழிவு நோயாளிகளுக்கு பண்டிகை காலத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்ற, ரசாயனப் பொருள்களால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை மாற்றுவது ஒரு நல்ல வழி என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இது ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படாத தன்மையின் காரணமாகும். வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க அனுமதிக்கிறது. ஆனால் இது உண்மையில் அப்படியா? ஆனால் முதலில், வெல்லத்தின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

ட்ரெண்டிங் செய்திகள்

வெல்லத்தில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் காரணமாக, உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட வேண்டும் என்று நம் பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு என்றால் அது குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பொருட்களை உள்ளடக்கியதாகும். ஆனால் வெல்லத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிக அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிட எந்த மருத்துவரும் பரிந்துரைக்கவில்லை.

வெல்லம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா?

ஊட்டச்சத்து நிபுணரான சூர்யா மாணிக்கவேல் கூறுகிறார், “ஆம், உணவில் வெல்லம் பயன்படுத்தும் போது சர்க்கரை அளவு உயரக்கூடும். அதன் உயர் கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெல்லம் ஒரு நல்ல தேர்வாக இருக்காது. நேரடி சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டாலும், நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். ரத்த ஓட்டம் அதை விரைவாக உறிஞ்சிவிடும்.

வெல்லம் ஏன் சிறந்த மாற்றாக இல்லை?

வெல்லத்தில் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெல்லத்தை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படவில்லை. நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இனிப்பு எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், சர்க்கரைக்கு மாற்றாக தயாரிக்கப்படும் இனிப்புகள் கூட ஆபத்தானவைதான். நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லா வகை இனிப்புகளையும் புறக்கணிக்க வேண்டும்.

ஜீனியும் வெல்லமும் சமமாக தீங்கு விளைவிக்குமா?

“ஜீனி அல்லது வெல்லம் சாப்பிடுவது உங்கள் ரத்த சர்க்கரை அளவை சிறிது பாதிக்கிறது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். இது உண்மையல்ல. தவறான கருத்தாகும். வெல்லத்தில் சுக்ரோஸ் உள்ளது, இது நம் உடலால் உறிஞ்சப்படும்போது ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. இது மற்ற சர்க்கரைகளைப் போலவே ஆபத்தானது" என்று சூர்யா மாணிக்கவேல் விளக்குகிறார்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு விவேகமான முடிவு. நீரிழிவு நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவை பரிந்துரைக்கின்றனர். எனவே வெல்லம் அவர்கள் சாப்பிடக் கூடாது.

ரத்தத்தில் சர்க்கரை பிரச்னைகள் ஏதும் இல்லை என்றால் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் வெல்லத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

டாபிக்ஸ்