Biryani Everyday : தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஆபத்தா? அதுவும் இரவில் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?-is it dangerous to eat biryani everyday and that what happens with eating at night - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Biryani Everyday : தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஆபத்தா? அதுவும் இரவில் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?

Biryani Everyday : தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஆபத்தா? அதுவும் இரவில் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?

Divya Sekar HT Tamil
Aug 21, 2024 01:21 PM IST

Biryani Everyday: பிரியாணி சாப்பிட்டவுடன் மூலிகை தேநீர் அல்லது எலுமிச்சை தேநீர் குடிப்பது நல்லது. இது பிரியாணியில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

Biryani Everyday  : தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஆபத்தா? அதுவும் இரவில் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?
Biryani Everyday : தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஆபத்தா? அதுவும் இரவில் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?

தினமும் சாப்பிடுவது கொஞ்சம் ஆபத்து

வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ பிரியாணி சாப்பிடுவது தவறில்லை. ஆனால் தினமும் சாப்பிடுவது கொஞ்சம் ஆபத்து தான். அது பாதுகாப்பானது கிடையாது. குறிப்பாக நாம் பொதுவாக பிரியாணி என்றாலே கடைகளில் வாங்கி சாப்பிடுவது தான் வழக்கம். வீட்டில் செய்து சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவது உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும்.

ஏனென்றால் உணவகங்களில் சமைக்கப்படும் பிரியாணியில் அளவுக்கு அதிகமாக சுவை ஊட்டுவதற்காக சில பொருட்களை சேர்ப்பார்கள். எண்ணெய்யும் அதிக அளவில் சேர்ப்பார்கள். ஆனால் இதுவே வீட்டில் சமைக்கும் போது நாம் பார்த்து பார்த்து தேவைக்கு ஏற்ப பொருட்களை சேர்த்து சமைப்போம். இது நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் கடைகளில் வாங்கும் பிரியாணியில் அவ்வளவு ஆரோக்கியம் கிடைப்பது சந்தேகம் தான்.

மிட் நைட் பிரியாணி

எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, பிறந்தநாள் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி அல்லது தேர்வில் வெற்றி பெற்றாலும் சரி, அங்கு நாம் கேட்பது பிரியாணி மட்டுமே. அவ்வளவு பிரியம் பிரியாணி மேல் அனைவருக்கும் உண்டு.

இன்றைய சூழலில் பிரியாணி என்பது பல வகைகளில் விற்கப்படுகிறது. பொதுவாக பாக்கெட் பிரியாணி, ஒரு கிலோ பிரியாணி, மிட் நைட் பிரியாணி என பிரியாணி கடைகள் நிறைய வளர்ந்து வருகிறது. இந்த பிரியாணியில் சேர்க்கப்படும் அரிசி, இறைச்சி, எண்ணெய் என எல்லாமே அளவு மீறும் போது உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

ருசிக்காகவே சாப்பிடுகிறார்கள்

பிரியாணியை பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் பசிக்கு சாப்பிடுவது வேறு ஆனால் ருசிக்காக சாப்பிடுவது பிரியாணி மட்டுமே. பிரியாணி சாப்பிடுபவர்கள் அனைவரும் பசி காக்க சாப்பிடுவதில்லை. ருசிக்காகவே சாப்பிடுகிறார்கள்.

அதாவது பிரியாணி தற்பொழுது இரவு நேரத்திலும் மிட்நைட் பிரியாணி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஆனால் இரவில் நாம் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு கொடுப்பது அவசியம். இரவு முதல் அடுத்த நாள் காலை வரை நாம் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அதனால் தான் இரவு உணவை தூக்கத்திற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

உடல் நலத்தை பாதிக்கும்

ஒருவேளை நீங்கள் பிரியாணி பணி சூழல் காரணமாக இரவு நேரத்தில் சாப்பிடவே நேர்ந்தால் நீங்கள் அடுத்த நாள் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இரவு ஒரு மணி அளவில் பிரியாணியை சாப்பிட்டு விட்டு காலை எழுந்ததும் வயிறு நிறைய சாப்பிட்டால் அது உங்கள் உடல் நலத்தை பாதிக்கும். எனவே பிரியாணியை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிரியாணி சாப்பிட்டவுடன் மூலிகை தேநீர் அல்லது எலுமிச்சை தேநீர் குடிப்பது நல்லது. இது பிரியாணியில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

அதேபோல் பிரியாணியை தினமும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிட வேண்டும் என்றால் வீட்டில் சமைத்த பிரயாணியை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் கடைகளில் வாங்கி உண்ணும் பிரியாணி தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.