‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ பொருளாதார நெருக்கடியா? அது உடலையும், உறவுகளையும் சிதைக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி?
பொருளாதார நெருக்கடி உங்கள் உடல் மற்றும் உறவுகளை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி?
பொருளாதார நெருக்கடி உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், உறவுகளையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் அனைவரும் நல்ல தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்று தான் விரும்புவோம். ஆசைகளை அடையவேண்டும் என்ற ஆவலில் நாம் சில நேரங்களில் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிக்கொள்கிறோம். இதனால் உங்களின் மன ஆரோக்கியம் மட்டுமல்ல, உங்களின் உறவும் பாதிக்கப்படும். எனவே பண நெருக்கடியால் உங்கள் உடல் மற்றும் உறவுகள் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி என்று பாருங்கள்.
நாள் முழுவதும் கடுமையாக உழைத்து ஒருவர் தங்களின் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறார்கள். அதற்கு அதிகம் பணத்தை சம்பாதிக்கிறார்கள். அவர்களின் கடமைகள் மற்றும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளவும், மகிழ்ச்சியாக இருக்கவும் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்கள். எனினும், மனித மனம் எப்போதும் அதிகம் பணம் வேண்டும் என்றுதான் ஆசைப்படும். இன்று பெருமையாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு குறைவான மகிழ்ச்சியும், பிரச்னைகளும்தான் அதிகம் வரும்.
அவர்கள் பணம் சம்பாதிக்க விரும்புவது அல்லது அதிக பணம் செலவு செய்வது இரண்டும் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு உறக்கமின்மை, பதற்றம், உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், இதய துடிப்பு மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த சூழலில், இன்று நாம் பொருளாதார நெருக்கடிகளை கையாளும் சில வழிகளை இங்கு காணலாம்.
உங்கள் செலவுகளைப் பாருங்கள்
நீங்கள் பணத்தை முறையாக செலவு செய்யவேண்டுமென்றால், நீங்கள் எங்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று பாருங்கள். உணவு, போக்குவரத்து, பில்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்களின் வருமானம் எங்கு செல்கிறது என்று பாருங்கள். எண்ணிக்கையில் வராத செலவுகள்தான் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் செலவுகளை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சிறிய நகர்வுகள், பெரிய பாதிப்புக்கள்
உங்கள் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுக்கும் சிறிய நகர்வுகள் உங்கள் ஓய்வு காலத்தில் உங்களுக்கு பெரிய நன்மைகளைத் தரும். ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், அதை ஓய்வு காலத்துக்கு என்று கட்டாயம் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களின் அவசர தேவைகளுக்காக உதவக்கூடியவை ஆகும். இது உங்களின் பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்க உதவும். இதனால் நீங்கள் பொருளாதார அழுத்தத்தில் இருந்து விலகியிருக்கலாம்.
உங்கள் உறவில் அது ஆதிக்கம் செலுத்தக் கூடாது
உங்கள் தனிப்பட்ட உறவில் பணம் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இதற்கு நீங்கள் கணவன்-மனைவி இடையே ரகசியங்களை வைத்துக்கொள்ளாதீர்கள். செலவுகளை மறைக்காதீர்கள், மனம் திறந்து பேசுங்கள், உங்களின் பொருளாதார இலக்குகள் குறித்து உரையாடுங்கள். நீங்கள் உங்கள் பொருளாதார தவறுகள் மற்றும் முடிவுகள் குறித்து அழுது புலம்பி நேரத்தை விரையமாக்குவதை தவிர்த்து, எதிர்காலத்துக்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள். இது உங்களின் பொருளாதார நெருக்கடிகளை பெருமளவுக்கு குறைக்க உதவும்.
மற்றவர்களிடம் பெருமையாகக் காட்டிக்கொள்வதற்காக பணம் செலவு செய்யாதீர்கள்
இந்த நாட்களில் நாம் செய்யும் தவறுகளுள் முக்கியமானது, மற்றவர்களை கவரவேண்டும் என்பதற்காக நாம் செலவு செய்கிறோம். விலை உயர்ந்த கார்கள் வாங்குவது, உடைகள் உடுத்துவது என பணத்தை செலவிடாமல் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். சரியான இடத்தில் முதலீடு செயயுங்கள், ஒரு திருப்திகரமான வாழ்க்கையை வாழுங்கள். இது உங்களின் பணத்தை சேமிக்க உதவும். உங்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க உதவும்.
மது போதை
இந்த பிரச்னைகளால் ஒருவர் மது அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையாகலாம். இந்த தேவையற்ற செலவுகள் உங்களுக்கு மனம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே நீங்கள் மது, போதைக்கு அடிமையாவதை தவிர்த்துவிடுங்கள். இது நீங்கள் செலவழித்த பணத்துக்கு எதுவும் செய்யாது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்