Hair Fall: கடுமையா முடி கொட்டுதா? எளிமையான தீர்வு தெரியுமா? நீங்க சாப்பிடும் சாப்பாடே போதும்!
Hair Fall: நாம் சாப்பிடும் உணவில் சமச்சீர் அளவில் அனைத்து சத்துக்களும் இருந்தால் மட்டுமே போதுமானது. நமது முடியின் அனைத்து நலன்களும் பராமரிக்கப்படும். முடி உறுதியானதாக நீளமாக வளர வேண்டும் என ஆசைப்படுபவர்கள் உணவு முறையை ஒழுங்கப்படுத்த வேண்டும்.

ஒருவரின் உடல் ஆரோக்கியம் அவர்களது முகம் மற்றும் முடியில் தான் தெரிகிறது என்பார்கள். அந்த அளவிற்கு அவர்கள் எழுது முடி உடல் ஆரோக்கியத்தின் முக்கியமான உதாரணமாகவும் காட்சி பொருளாகவும் உள்ளது. ஆனால் சிலர் கடுமையான முடி உதிர்வால் அவதிப்படுவார்கள். இந்த முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்வதுண்டு. ஆனால் மருத்துவ முறையில் இல்லாத சிகிச்சைகளை உணவுகள் தருகின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம் நாம் தினசரி உண்ணும் உணவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தமிழில் கூட “உணவே மருந்து” என்ற ஒரு பழமொழியும் உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் சமச்சீர் அளவில் அனைத்து சத்துக்களும் இருந்தால் மட்டுமே போதுமானது. நமது முடியின் அனைத்து நலன்களும் பராமரிக்கப்படும். முடி உறுதியானதாக நீளமாக வளர வேண்டும் என ஆசைப்படுபவர்கள் உணவு முறையை ஒழுங்கப்படுத்த வேண்டும். கடுமையான முடி இழப்பிற்கு உணவுதான் தீர்வு என மருத்துவ நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
ராகி, தினை மற்றும் கோதுமை போன்ற தானியங்கள் முடி ஆரோக்கியத்திற்கும் நல்லது. சத்தான உணவு உண்பது நம் முடி மற்றும் சருமத்தில் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சருமத்தைப் போலவே, நாம் உண்ணும் உணவும் முடியின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும்.
சமச்சீர் உணவு
உங்கள் உணவில் சரியான அளவு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கத் தேவையான அனைத்தும் வழங்கப்படுகின்றன. உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவுக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட ஜூஸ்கள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கோதுமை புல் சாறு, தக்காளி மற்றும் கீரை சாறு ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் தலைமுடியை வலுவாக்கும். ராகி, தினை மற்றும் கோதுமை முடி ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நல்ல கூந்தல் வேண்டும் என்றால் சில பழக்கங்களை கைவிட வேண்டும். அதில் சர்க்கரையும் ஒன்று. சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், அவுரி மற்றும் பிரங்க்ராஜ் போன்ற மூலிகைகள் முடியை வலுப்படுத்தவும் முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகின்றன. புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் முடிக்கு நல்லது. முட்டை, பச்சை காய்கறிகள் மற்றும் மீன் ஆகியவை முடியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இவை அனைத்தையும் சமமான அளவில் நாள் தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்