இரும்புச் சத்துக்கள் : இரும்புச் சத்துக்கள் வேண்டுமென்றால் இறைச்சி மட்டுமல்ல; வேறு என்ன சாப்பிடணும் பாருங்க!
உங்களுக்கு இரும்புச் சத்துக்கள் எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், அதற்கு நீங்கள் இறைச்சி மட்டும்தான் சாப்பிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. வேறு என்ன சாப்பிடலாம் பாருங்கள்.

சிவப்பு இறைச்சியல்லாமல் உங்கள் உடலின் இரும்புச் சத்தை அதிகரிக்க வேண்டுமா? அதற்கு என்ன செய்யலாம்? இது நிறைய பேரின் கவலையாக உள்ளது. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள், ஆரோக்கிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. நல்லவேளையாக நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், எண்ணற்ற இரும்புச் சத்துக்கள் இயற்கையிலேயே அதிகம் உள்ளன. அவை என்னவென்று தெரிநதுகொள்ளுங்கள்.
சமைத்த கீரை
சமைத்த அரை கப் கீரையில் கிட்டத்தட்ட 3.2 மில்லி கிராம் இரும்புச் சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்களும் உள்ளது. இது உங்கள் உடல் இரும்புச் சத்துக்களை நல்ல முறையில் உறிஞ்ச உதவுகிறது. இதை நீங்கள் சூப்கள், வேகவைத்து, வடை, கூட்டு என செய்தும் சாப்பிடலாம்.
டோஃபூ
அரை கப் டோஃபூவில் 3.4 மில்லி கிராம் இரும்புச் சத்துக்கள் உள்ளது. இது தாவர அடிப்படையிலான புரதச் சத்து ஆகும். இதில் நீங்கள் எண்ணற்ற டிஷ்கள் செய்யலாம். கிரேவிகள், சாலட்கள் அல்லது வறுவல் என செய்து ஸ்னாக்ஸாக என எண்ணற்ற வழிகளில் சாப்பிட முடியும்.