தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Iritis Or Inflammation Of The Iris: Causes, Symptoms And Care Tips For Your Eyes

Inflammation of the Iris: கருவிழி அழற்சிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள்

Marimuthu M HT Tamil
Jan 28, 2024 07:29 PM IST

கண்களில் கருவிழியில் ஏற்படும் அழற்சிக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

கருவிழி அழற்சிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள்
கருவிழி அழற்சிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Photo by Twitter/homeopathy360)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்களுக்கு, ஷார்ப் சைட் கண் மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் டாக்டர் புனீத் ஜெயின் அளித்த பேட்டியில், "கண் அழற்சி என்பது கருவிழியின் வீக்கம், கண்ணின் ஒரு பகுதி வேறு ஒரு நிறத்தைப் பெறுவதாகும். இது ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு முறைப்படி சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது பார்வையை பாதிக்கும்.

கண் அழற்சியின் காரணங்கள்

1. நோய் எதிர்ப்புக் கோளாறுகள்: முடக்கு வாதம் போன்ற சில நோய் எதிர்ப்புக் கோளாறுகள் காரணமாக கண் அழற்சி உண்டாகிறது. 

2. நோய்த்தொற்றுகள்: ஹெர்பெஸ் ஜோஸ்டர், காசநோய் உள்ளிட்ட சில பாக்டீரியா, வைரஸ் - பூஞ்சை தொற்றுகள் கருவிழி அழற்சியை ஏற்படுத்தக்கூடும்.

3. உடல் காயம்: உடலில் ஏற்படும் காயத்தால் ஏற்படும் அதிர்ச்சி கண் அழற்சிக்குக் காரணமாகிறது.

4. மரபணு முன்கணிப்பு: எச்.எல்.ஏ-பி 27 என்னும் மரபணு, கண்  அழற்சிக்குக் காரணமாகின்றன.

பாரதி கண் மருத்துவமனைகளின் மூத்த கண் மருத்துவர் டாக்டர் பூபேஷ் சிங் கூறுகையில், ‘’ கண் அழற்சி பல்வேறு காரணங்களிலிருந்து வெளிப்படலாம். இது பெரும்பாலும் முடக்கு வாதம் போன்ற தன்னுடல் தாக்கக் கோளாறுகளுடன் தொடர்புடையது. நோய்த்தொற்றுகளின் விளைவாக இருக்கலாம். கண்ணுக்கு வரும் நேரடியான அதிர்ச்சியின் காரணமாக, கண் அழற்சி ஏற்படலாம். இருப்பினும், சரியான காரணத்தை எங்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை’’ என்கிறார்.

அறிகுறிகளை அடையாளம் காணுதல்:

டாக்டர் பூபேஷ் சிங் கூறுகையில், "கண்ணின் வண்ண பகுதியான கருவிழியின் வீக்கம் தனித்துவமான அறிகுறி. கண்கள் சிவத்தல், வலி, ஒளியை உணர கஷ்டப்படும் திறன், மங்கலான பார்வை, தலைவலி. இந்த அறிகுறிகள் அசௌகரியம் மட்டுமல்ல, அவசரமாக மருத்துவ தலையீடு தேவைப்படும் ஒரு நிலையின் குறிகாட்டிகளாகும்’’ என்கிறார்.

நோய் கண்டறிதல் மற்றும் தீர்வு நடவடிக்கைகள்:

சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை  மேற்கொள்வது முக்கியம் என்று வலியுறுத்திய டாக்டர் புனீத் ஜெயின், ஒரு கண் மருத்துவர் பொதுவாக,முதற்கட்ட கண் அழற்சியைக் கண்டறிவார் என்று கூறினார்.

மேலும், பார்வைக் கூர்மையைச் சோதித்தல்;

 - விளக்கு பரிசோதனையை நடத்துதல்;

 - உள்விழி அழுத்தத்தை அளவிடுதல் ஆகியவை கருவிழி அழற்சியைக் கண்டறியும் வழிகளாகும். 

டாக்டர் பூபேஷ் சிங் மேலும் கூறுகையில், "கருவிழி அழற்சியை துல்லியமாக கண்டறிய, ஒரு விரிவான பரிசோதனை அவசியம் முக்கியம். அதில் பிளவு விளக்கு பரிசோதனை முக்கியமானது. சில நேரங்களில், ஒரு அடிப்படை முறையான காரணத்தைக் கண்டறிய, ரத்தப் பரிசோதனைகள், தோல் பரிசோதனைகள் அல்லது எக்ஸ்-கதிர் பரிசோதனைகள் போன்ற கூடுதல் பரிசோதனைகளை நாங்கள் நடத்த வேண்டியிருக்கலாம்’’ என்றார்.

சிகிச்சை:

டாக்டர் புனீத் ஜெயின் கூற்றுப்படி, சிகிச்சையானது பொதுவாக , ‘’

1. பாப்பில்லரி தசைகளை தளர்த்த கார்டிகோஸ்டீராய்டு கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தி வலி மற்றும் வீக்கத்தைத் தணிக்கவேண்டும்.

2. ஏதேனும் அடிப்படை காரணங்களுக்கு சிகிச்சையளிக்கலாம்’’என்றார். 

டாக்டர் பூபேஷ் சிங் எடுத்துரைத்தார், "கண் அழற்சிக்கு சிகிச்சையளிப்பதற்கான அணுகுமுறை தனிநபரின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வீக்கத்தைக் குறைக்க கார்டிகோஸ்டீராய்டு கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் வீக்கம் குறையும்.

கண் அழற்சியில் இருந்து மீண்டும் வருவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அதற்கு நீண்டகால கண்காணிப்பு தேவைப்படுகிறது.

கண் பராமரிப்பு மற்றும் கண் அழற்சி தடுப்பு முறைகள்:

டாக்டர் புனீத் ஜெயின் நோயாளிகள் பின்வரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளை கண்களுக்குப் பின்பற்றலாம் என்று பரிந்துரைத்தார்.

1. பிரகாசமான ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ்களை அணிவது.

2.கண் சிரமத்தைக் குறைக்க, கண்ணுக்குப் போதுமான ஓய்வு கொடுத்தல்

3. பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கலாம்.

கண் அழற்சி தடுப்புகள் குறித்து டாக்டர் பூபேஷ் சிங் கூறியதாவது, "கண் அழற்சி தடுப்பு பெரும்பாலும் அடிப்படை காரணங்களைப் பொறுத்தது. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் பாதுகாப்பான கண்ணாடிகள் சில அபாயங்களைக் குறைக்கும். உடனடி கண்டறிதல் மற்றும் சரியான மருத்துவ தலையீடு மூலம் கருவிழி அழற்சியைத் திறம்பட நிர்வகிக்க முடியும். கண் அழற்சி மீண்டும் மீண்டும் நிகழக்கூடும். சிகிச்சையளிக்கும் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி வழக்கமான பின்தொடர்தல்கள் தேவை. கண் அழற்சி அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருப்பது மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகளை உறுதி செய்வது சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும் முக்கியமாகும்.

கண் அழற்சி அறிகுறிகளை அடையாளம் காண்பது மற்றும் உடனடி மருத்துவ உதவியைப் பெறுவது நேர்மறையான முடிவுக்கு மிக முக்கியம். சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சிகிச்சை பொதுவாக சாதகமான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால் அறிகுறிகளை புறக்கணிப்பது கிளகோமா, கண்புரை அல்லது பார்வை இழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, கண் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதும் முன்னுரிமை அளிப்பதும், குறிப்பாக கண் அழற்சி போன்ற நிலைமைகளில் இருந்து நம்மைக் காக்க உதவும்’’ என்றார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்