விற்பனைக்கு வந்த ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி-iqoo neo 6 5g smartphone has been for sale in india - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  விற்பனைக்கு வந்த ஐக்யூ (Iqoo) நியோ 6 5ஜி

விற்பனைக்கு வந்த ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2022 08:13 PM IST

ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

<p>ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி</p>
<p>ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி</p>

இதேபோன்று ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே அதன் புதிய மாடலான ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி ஸ்மார்ட் போன் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று(மே.31) முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி உள்ள நிலையில், அமேசான் தளத்தில் வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை சலுகைகளுடன் கிடைக்க உள்ளது.

ஐக்யூ (iQOO) நியோ 6 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் 5ஜி சிப்காட் புராசஸர் கொண்டு அமைந்துள்ளது. இதில் 80W ஃபாஸ்ட் சார்ஜ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அமோல்ட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது. பார்க் நோவா, சைபர் ரேஞ்ச் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் பின்பக்க கேமரா, 64MP OIS சென்சார், 8MP அல்ட்ரா வைட் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் ஆகியவைகளைக் கொண்டு அமைந்துள்ளது. 

முன்பக்கத்தில் 16MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.