தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Intimacy After C-section: சிசேரியனுக்கு பிறகு உடலுறவு! கவனிக்க வேண்டிய விஷயங்கள் - பாதிப்புகளை தவிர்க்கும் வழிகள்

Intimacy After C-Section: சிசேரியனுக்கு பிறகு உடலுறவு! கவனிக்க வேண்டிய விஷயங்கள் - பாதிப்புகளை தவிர்க்கும் வழிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 23, 2024 10:00 PM IST

Intimacy After C-Section: சிசேரியனுக்கு பிறகு உடலுறவு மீண்டும் தொடங்குவதற்கு பொறுமை, உறவுடனான தொடர்பு மற்றும் உங்கள் உடலின் தேவைகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஆக உள்ளன. சிசேரியனுக்குப் பிறகான உடலுறவில் பாதிப்புகளை தவிர்க்க ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

சிசேரியனுக்கு பிறகு உடலுறவு, கவனிக்க வேண்டிய விஷயங்கள்
சிசேரியனுக்கு பிறகு உடலுறவு, கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

புதிதாக பிறந்த குழந்தையை பராமரிப்பதற்கும், பிரசவத்துக்கும் பிறகான வாழ்க்கையை சரிசெய்வதற்கு இடையில், தம்பதிகளிடம் உடலுறவுக்கு பெரிய அளவில் முன்னுரிமை இருக்காது.

இருப்பினும், சிசேரியனுக்கு பின் நீங்கள் குணமடையும் போதும், கர்ப்பத்துக்கு பின் மீண்டும் பாலியல் நெருக்கத்தில் ஈடுபடுவதற்கு எது சரியான நேரம், காலம் என்பது குறித்து பலருக்கும் குழப்பம் ஏற்படுவது இயல்புதான். சிசேரியனுக்கு பிறகும் இயல்பான நெருக்கத்தை, பாலியல் உறவிலும் ஈடுபடுவதற்கு பின்பற்ற வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்

சிசேரியன் என்றால் என்ன?

குழந்தைபேறுக்காக செய்யப்படும் சி-செக்‌ஷன் என்று அழைக்கப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சையில், கர்ப்பமாக இருக்கும் தாயின் வயிறு மற்றும் கருப்பையில் கீறல் செய்யப்பட்டு, குழந்தை பிரசவிக்கப்படுகிறது. பிரசவத்தின்போது தாய் அல்லது குழந்தைக்கு ஏதாவது சிக்கல் ஏற்படும்பட்சத்தில் சிசேரியனானது பரிந்துரைக்கப்படுகிறது. அவசரகால செயல்முறையாகவும் இது செய்யப்படுகிறது.

சிசேரியனுக்கு பிறகு எப்போது உடலுறவு கொள்ளலாம்?

பிரசவத்துக்கு பின் ஆறு வாரங்கள் காத்திருந்து மீண்டும் உடலுறவை தொடங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் பொதுவாக பரிந்துரைக்கிறார்கள். இந்த நேரத்தில் சிசேரியனுக்கான கீறல் இருக்கும் தாயின் கருப்பை வாய் மூடப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும். பிரசவத்துக்கு பின்னரும் ஏதாவது பிரச்னைகளை சந்திக்க நேரிட்டால் எட்டு அல்லது பத்து வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருக்க, திசு முழுமையாக குணமடைய அனுமதிக்க வேண்டும். பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம்

சிசேரியனுக்கு பிறகு உடலுறவில் சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களாக மருத்துவ நிபுணர்கள் கூறும் அறிவுரைகளை பார்க்கலாம்

முழுமையாக குணமடைய நேரம் ஒதுக்குங்கள்

சிசேரியனுக்கு பிறகு பொதுவாக 6 முதல் 8 வாரங்களுக்குஉடல் குணமடைய அனுமதிக்க வேண்டும்யது அவசியம். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆய்வில் ஈடுபட்டுள்ள பெண்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சி-பிரிவில் 6 வாரங்களுக்குள் பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கினார்கள், சிலர் செய்யவில்லை.

எனவே, ஒவ்வொரு பெண்ணுக்கும் குணமடையும் நேரம் மாறுபடலாம். மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் உடலுறவை மீண்டும் தொடங்க அதிக நேரம் எடுக்கலாம். உங்கள் உடல் குணமடைய போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு வசதியாக உணர்ரும் போது மட்டுமே துணையுடன் உடலுறவு கொள்ளலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

உடல் சொல்வதை கேளுங்கள்

உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் வலி, அசௌகரியம் அல்லது பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் கவலையை அனுபவித்தால், உங்கள் மருத்துவரிடம் கேட்காமல் உடலுறவை முயற்சி செய்யாதீர்கள்.

நீங்கள் மனம், உடல் தயாராக இருக்கும் வரை காத்திருப்பது மிக அவசியம். உங்கள் உணர்வுகள் மற்றும் கவலைகள் பற்றி உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுங்கள்.

லூப்ரிகேஷன் பயன்படுத்துதல்

பிரசவத்துக்கு பிந்தைய காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, சில பெண்களுக்கு பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படலாம், இது உடலுறவு சங்கடத்தை தரலாம். நீர் சார்ந்த லூப்ரிகண்ட்ஸ் பயன்படுத்துவதன் மூலம் உராய்வு மற்றும் அசௌகரியத்தைக் குறைக்கலாம்.

மெதுவாக தொடங்குங்கள்

பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க நீங்கள் தயாராக இருக்கும்போது நிதானம் தேவை. உறவில் ஈடுபடுவதை மெதுவாக தொடங்குங்கள். வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்த நிலைகளையும், செயல்பாடுகளை தவிர்க்கவும். வசதியாக உணரும் வெவ்வேறு நிலைகள் மற்றும் நுட்பங்களுடன் பரிசோதனை செய்து உறவில் ஈடுபடுங்கள்.

சிசேரியனுக்கு பிறகு உடலுறவு கொள்வதால் ஆபத்துகள் உள்ளதா?

சிசேரியனுக்கு பிறகு முழுமையாக மீண்டு வருவதற்கு முன்பு உடலுறவை மீண்டும் தொடங்குவதால் சிலருக்கு தொற்று மற்றும் ரத்தப்போக்கு ஏற்படலாம். எனவே உங்கள் மருத்துவரை முன்கூட்டியே அணுக உரிய ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும். சி-பிரிவு கீறல் குணமடைந்தவுடன் பாலியல் செயல்பாடு முற்றிலும் பாதுகாப்பானது.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்