International Zebra Day: அழகிய தோற்றம்.. பிறந்ததும் ஓடும் வல்லமை கொண்ட உயிரினம்.. சர்வதேச வரிக்குதிரை நாள் இன்று
International Zebra Day 2025: சர்வதேச வரிக்குதிரை நாளான இன்று இந்த அரியவகை உயிரினம் பற்றி அறிந்திடாத விஷயங்களை சிலவற்றை பார்க்கலாம். அழிவை நோக்கி செல்லும் உயிரனமாக இருந்து வரும் இதை பாதுகாக்கவும் இந்த நாளில் வலியுறுத்தப்படுகிறது.

காடுகளில் வாழும் விலங்குகளில் தோற்றத்தில் தனித்துவமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும் விலங்குகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது வரிக்குதிரை. புற்கள், தாவரங்கள், பாசி போன்ற பிற பல்லுயிர் உயிரினங்களை உண்ணும் மேய்ச்சல் உயிரனமாக இருந்து வரும் வரிக்குதிரை பெயருக்கு ஏற்றார் போல் கருப்பு மற்றும் வெள்ளை நிற வரிகளை உடல் முழுவதிலும் கொண்ட விலங்கினமாக உள்ளது. சிங்களால் வேட்டையாடக்கூடிய விலங்காக இருந்து வரும் வரிக்குதிரைகள் தங்களை தற்காத்து கொள்ள ஓடுவது அல்லது எட்டி உதைப்பது போன்றவற்றை செய்வதாக கூறப்படுகிறது.
உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வரிக்குதிரை இனத்தைப் பாதுகாப்பதில், தனிநபர்கள் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக சர்வதேச வரிக்குதிரை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆப்பிர்காக கண்டத்தில் அதிகமாக காணப்படும் வரிக்குதிரைகள், கென்யா, எத்தியோப்பியாவின் அரை பாலைவனப் பகுதிகள் மற்றும் நமீபியா, அங்கோலா, தென்னாப்பிரிக்காவின் மலைப்பாங்கான பகுதிகள் அதிகமாக உயிர் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மனித மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக பாதிப்புகளை சந்திக்கும் உயிரினங்களின் முக்கியமானதாக வரிக்குதிரையும் இருந்து வருகிறது. இயற்கையான வாழ்விடத்தின் நிகழப்படும் தொந்தரவு விலங்குகளின் வாழ்க்கை முறையில் ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் அழிந்து வரும் வரிக்குதிரை உயிரினத்தை பற்றிய விஷயங்களை பரப்புவதற்கும், அதை வீழ்ச்சியை தடுக்க உதவும் தீர்வுகளை தேடுவதற்கும் சர்வதேச வரிக்குதிரை நாள் சிறந்த வாய்ப்பாக அமைகிறது
சர்வதேச வரிக்குதிரை தினம் வரலாறு
சர்வதேச வரிக்குதிரை தினம் ஆண்டுதோறும் ஜனவரி 31ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பு உயிரியல் நிறுவனம் மற்றும் ஸ்மித்சோனியனின் தேசிய உயிரியல் பூங்கா உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் குழு சர்வதேச வரிக்குதிரை தினத்தை உருவாக்கியதாக கருதப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் வரிக்குதிரைகளின் வாழ்க்கை நிலைமைகளை எடுத்துரைப்பதையும், அதன் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கும் பல்வேறு உத்திகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
தற்போது காடுகளில் மூன்று வெவ்வேறு வகையான வரிக்குதிரை இனங்கள் வாழ்கின்றன: கிரேவியின் வரிக்குதிரை, சமவெளி வரிக்குதிரை மற்றும் மலை வரிக்குதிரை. அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் ரெட் லிஸ்டில் கிரேவியின் வரிக்குதிரை இருந்து வருகிறது. இது மிகவும் அழிந்து வரும் நிலையில் உள்ளது. ஆப்பிரிக்க வனவிலங்கு அறக்கட்டளை, கடந்த மூன்று தசாப்தங்களில் அவற்றின் எண்ணிக்கை சுமார் 54% வரை குறைந்துள்ளதாக மதிப்பிடுகிறது.
வரிக்குதிரை தினம் முக்கியத்துவம்
வரிக்குதிரைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் நீண்டகால உயிர்வாழ்வை உறுதி செய்யவும் பொது மக்கள், மற்றும் அரசாங்கங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இந்த நாள் வலியுறுத்துகிறது. வரிக்குதிரைகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதற்கான அவற்றின் முக்கியத்துவம் கவனத்தில் கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்படுகிறது.
வேட்டையாடுதல், அதன் வாழ்விடச் சீரழிவு மற்றும் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் போன்ற பல காரணிகளால் வரிக்குதிரைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. எனவே அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. வரிக்குதிரைகள் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதன் மூலம், இந்த அற்புதமான விலங்குகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினரின் மகிழ்ச்சிக்காக அவற்றின் இயற்கை பாரம்பரியத்தை அப்படியே வைத்திருக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.
வரிக்குதிரைகள் பற்றிய தனித்துவமான விஷயங்கள்
வரிக்குதிரைகள் உண்மையில் கருப்பு நிறத்தை கொண்டவை. அவற்றில் வெள்ளை நிறத்தில் கோடுகளுடன் உள்ளன. வெள்ளை நிற கோடுகள் முடியில் மெலனின் இல்லாததால் ஏற்படுகின்றன. மனித கைரேகைகளைப் போலவே, ஒவ்வொரு வரிக்குதிரைகளில் இருக்கும் கோடுகள் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.
நின்றாவாறே தூங்கும்
வரிக்குதிரைகள் குதிரைகள் மற்றும் கழுதைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை மற்றும் ஈக்வஸ் இனத்தைச் சேர்ந்தவை. வரிக்குதிரைகள் "டாஸ்ல்ஸ்" என்று அழைக்கப்படும் குழுக்களாக வாழும் மிகவும் சமூக விலங்குகள். வரிக்குதிரைகள் சிறந்த இரவு பார்வை மற்றும் செவிப்புலன் கொண்டவை.அதேபோல் அதிநவீன தகவல் தொடர்பு திறன்களைக் கொண்டு விலங்கு என சொல்லப்படுகிறது. நின்றுகொண்டே தூங்கும் விலங்கினமாக உள்ளது.
பிறந்தவுடன் ஓடக்கூடிய விலங்கினம்
மணிக்கு 65 கிமீ வரையிலான வேகத்தில் ஓடக்கூடிய வரிக்குதிரை, 1980களில் 5,800 வரை இருந்த எண்ணிக்கை தற்போது 2 ஆயிரம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. புதிதாக பிறக்கும் வரிக்குதிரை குட்டிகள், பிறந்து ஆறு நிமிடங்களுக்குப் பிறகு நிற்கும், 20 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றால் நடக்க முடியும், 40 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஓடவும் முடியும் என கூறப்படுகிறது. குதிரை மற்றும் கழுதை குடும்பத்தை சேர்ந்த வரிக்குதிரை அழிவை சந்தித்து வரும் விலங்குகளில் ஒன்றாக உள்ளது.
சர்வதேச வரிக்குதிரை நாள் 2025 கருபொருள்
"வரிக்குதிரைகளின் அழகு மற்றும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த்துவது" என்பது இந்த ஆண்டுக்கான சர்வதேச வரிக்குதிரை நாள் கருபொருளாக உள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்