International Tiger Day : புலிகளை காப்பதன் முக்கியத்தும், அழிவை தடுக்க செய்யவேண்டியவை மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்!
International Tiger Day : புலிகளை காப்பதன் முக்கியத்தும், அழிவை தடுக்க செய்யவேண்டியவை மற்றும் புலிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

புலிகளை காப்பதன் முக்கியத்துவம்
சர்வதேச புலிகள் தினம், சர்வதேச சமுதாயத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் கடைபிடிக்கப்படுகிறது. சமூக மக்களிடம், அரசிடம், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் வனவிலங்கு விரும்பிகளிடம் கூறி இன்றைய நாளில் இந்த தினம் குறித்த, கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்துவது. ஒவ்வொருவரும் புலிகளை எப்படி பாதுகாக்க முடியும் என்பதற்காகவும் புலிகளை காப்பதற்காக உலகம் முழுவதும் என்ன முன்னெடுப்புகள் நடத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
புலிகள் அழிவை தடுக்க என்ன செய்யவேண்டும்?
அதற்கு அழிவில் விழிம்பில் இருக்கும் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களை புறக்கணிப்பது. அவற்றை பாதுகாக்கும் நிறுவனங்களுக்கு அதரவு அளிப்பது, கடுமையான சட்டங்களை வகுப்பது மற்றும் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என நீங்கள் இந்த நாளில் செய்யவேண்டியவை ஆகும். 20மாவது நூற்றாண்டில் மட்டும் 95 சதவீதம் புலிகள் குறைந்துவிட்டன. எனவே அவற்றை பாதுகாக்கும் முன்னெடுப்புகள் அவசியம்.
புலிகள் அழிவிற்கான காரணங்கள் என்ன?
வாழிடங்கள் இழப்பு, சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவது, சட்டவிரோதமான விலங்குகள் வர்த்தகம், மனித – விலங்கு மோதல், பருவநிலை மாற்றம், போதிய வனவிலங்கு பாதுகாப்பின்மை, விழப்புணர்வின்மை போன்ற காரணங்களால் புலிகள் மட்டுமின்றி அனைத்து வகை வன விலங்குகளும் அழிக்கப்படுகின்றன அல்லது அழிந்துவருகின்றன.
சர்வதேச புலிகள் தின கருப்பொருள்
இந்தாண்டு புலிகள் தினத்தின் கருப்பொருள் செயல்பாடுக்கான அழைப்பு என்பதாகும். தற்போது வன விலங்கு குற்றங்களைக் குறைக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஏற்படுத்துவது, உள்ளூர் மக்களின் உதவியுடன் புலிகளை காப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என இந்த நாளில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலம் நம் கைகளில் என்பது ஒவ்வொரு ஆண்டு புலிகள் தினத்தின் அறைகூவலாக இருக்கும்.
புலிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
புலி, காட்டுப் பூனை குடும்பத்தைச் சேர்ந்து மிகப்பெரிய இனம்.
ஒவ்வொரு புலியின் சருமத்திலும், அதன் உடலில் உள்ள கோடுகள் தனித்துவமாக இருக்கும். பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் அவை வெவ்வேறானவை.
தனிமையில் வேட்டையாடும் என்பதால் புலிகள் இரவு நேர விலங்குகளாக உள்ளது.
பிறப்பதில் பாதியளவு புலிகள் உயிர் பிழைக்கின்றன. பிறக்கும்போது அவற்றிற்கு கண்கள் தெரிவதில்லை.
புலியின் எச்சில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றிற்கு காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் நக்கியே காயங்களை ஆற்றிக்கொள்கின்றன.
புலி, விலங்குகளை மட்டும் சாப்பிடும் மிருகம், சைபீரியன் புலியினங்கள் உலகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. புலியின் அதிகபட்ச எடை 660 பவுண்ட்கள். ஒரு மணி நேரத்தில் 40 கிலோமீட்டர் பயணிக்கும் தன்மைகொண்டவை.
பர்சிய மொழியான டைக் என்பதிலிருந்து ஆங்கிலத்தின் டைகர் என்ற பெயர் வந்தது. புலிகள் அதன் சருமத்தில் உள்ள கோடுகளுக்காக அறியப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சமநிலையைக் காக்க சிறு தாவர உண்ணிகளை வேட்டையாடி உண்கின்றன. ஒரு வளர்ந்த புலி, ஒரு நேரத்திற்கு 88 பவுண்ட் கறியை உட்கொள்கிறது. 10 முதல் 15 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.
புலிகளால் நீச்சல் அடிக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 19ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அழிந்துவரும் இந்த விலங்கினத்தை காக்க இந்த நாளில் உறுதிபூணுவோம். புலிகளும், நமக்குமாகன சிறப்பான உலகை உருவாக்குவோம்.

டாபிக்ஸ்