International Nurses Day 2024 : சர்வதேச செவிலியர் தின வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
International Nurses Day 2024 : சர்வதேச செவிலியர் தினத்தின் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம், ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினத்தை நினைவுகூறும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. செவிலியர்கள் வரலாற்றில் இவர் மிகவும் முக்கியமானவர்.
உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களால் இந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி, பல்வேறு செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் இந்த நாளில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
செவிலியர்கள் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுகாதாரத் துறையில் செவிலியர்களின் அளப்பரிய பணிகளின் முக்கியத்துவம் குறித்து பேசவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் கருப்பொருள், வரலாறு, முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்வோம்.
சர்வதேச செவிலியர்கள் தினம் 2024 – கருப்பொருள்
சர்வதேச செவிலியர் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘நமது செவிலியர்கள், நமது எதிர்காலம்’ என்பதாகும்.
சர்வதேச செவிலியர் தினம் – வரலாறு
1953ம் ஆண்டு முதல் சர்வதேச செவிலியர் தின வரலாறு அறியப்படுகிறது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரி டோரத்தி சுதர்லாண்ட், செவிலியர் தின கொண்டாட்டத்தை முன் மொழிந்தார். ஆனால் அப்போதை அதிபர், டிவிட் டி.எய்சென்ஹோவர் இதை அங்கீகரிக்கவில்லை.
சர்வதேச செவிலியர் கவுன்சில், அந்த நாளை அங்கீகரித்தது. 1974ம் ஆண்டு, சர்வதேச செவிலியர் கவுன்சில், மே 12ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அங்கீகரித்தது. ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலை கவுரவப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்
மானுட சமூகத்தின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வை பேணுவதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களுக்கு மனித உடல் குறித்து ஆழ்ந்த புரிதல் உள்ளது. அவர்கள் பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர்களாகவும் இருக்கிறார்கள். நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அறிந்து அவர்கள் செயல்படுகிறார்கள்.
செவிலியர்கள் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களோடு இணைந்து பணியாற்றி, ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு, பணிபுரிந்து நோயாளிகளின் சிரமங்களை குறைக்கிறார்கள்.
சர்வதேச செவிலியர்கள் தினம், செவிலியர்கள் குறித்த முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அவர்களின் அர்ப்பணிப்புமிக்க பணிகள் மற்றவர்களின் வாழ்வில், மாற்றத்தை கொண்டுவருகிறது.
சர்வதேச செவிலியர்கள் தினம், சுகாதாரத் துறையில், செவிலியர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரத் துறையில் முதுகெழும்பே செவிலியர்கள்தான். அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள பலரின் வாழ்வில் அவர்கள் ஒளியேற்றுகிறார்கள்.
செவிலியர்களுக்கு இந்த நாளில் வாழ்த்து கூறுங்கள். நன்றி சொல்லுங்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை போற்றுங்கள்.
உங்களுக்கு பிடித்த செவிலியர்களுக்கு பரிசு கொடுங்கள். அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று செவிலியர்களுக்கு வாழ்த்து கூறுங்கள்.
அவர்களுக்கு ஒரு காபி அல்லது கால்களில் மசாஜ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். செவிலியர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களாக இருந்தால், அவர்களை செவிலியர் தினத்தில் கொண்டாட மறக்காதீர்கள். அவர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேர வேலையில் கிட்டத்தட்ட 5 முதல் 6 கிலோமீட்டர்கள் வரை நடக்கிறார்.
சமூக வலைதளங்களில் இந்த நாள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுங்கள். செவிலியரை கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டாக்குகளை டிரண்டிங் ஆக்குங்கள்.

டாபிக்ஸ்