தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  International Mother Language Day 2024 Why International Mother Language Day Do You Know What This Year's Theme Is

International Mother Language Day 2024 : பன்னாட்டு தாய்மொழி தினம் ஏன்? இந்தாண்டு கருப்பொருள் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Feb 21, 2024 06:00 AM IST

International Mother Language Day 2024 : பன்னாட்டு தாய்மொழி தினம் ஏன்? இந்தாண்டு கருப்பொருள் என்ன தெரியுமா?

International Mother Language Day 2024 : பன்னாட்டு தாய்மொழி தினம் ஏன்? இந்தாண்டு கருப்பொருள் என்ன தெரியுமா?
International Mother Language Day 2024 : பன்னாட்டு தாய்மொழி தினம் ஏன்? இந்தாண்டு கருப்பொருள் என்ன தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தாண்டு சர்வதேச தாய்மொழி கொண்டாட்டத்தின் கருப்பொருளாக, பலமொழி கல்வி என்பது கற்றலுக்கும், தலைமுறையினரிடையே கற்றலுக்கு தூணாகவும் உள்ளது. இன்று உலகளவில் 250 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளி செல்லவில்லை. 763 மில்லியன் வயதானோருக்கு அடிப்படை எழுத்தறிவு கூட தெரியவில்லை. தாய்மொழி கல்வி என்பது கற்றல், கல்வி மற்றும் மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள என உதவுகிறது.

குறிக்கோள்கள்

2024ம் ஆண்டு தாய்மொழி தினம், நீடித்த வளர்ச்சி இலக்கு 4ஜ செய்து முடிப்பதற்கு ஆதரவளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வி மற்றும் உள்நாட்டு மொழிகள் பத்தாண்டின் (2022 – 2032) குறிக்கோள்களை எட்டுவது என்பதாகும்.

இந்த நிகழ்வு, பல மொழிகள், மொழி வேற்றுமையை சேர்த்து கல்வி வழங்க வேண்டும் என்ற யுனெஸ்கோவின் கொள்கைகளை சமர்ப்பிக்க ஒரு வாய்ப்பாகும். யுனெஸ்கோ அல்லது பர்டூ பல்கலைக்கழகம் (அமெரிக்கா) போன்ற பிற முன்முயற்சிகளுடன், உள்நாட்டு மொழிகளின் சர்வதேச பத்தாண்டு மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியை செயல்படுத்துவதற்கான கொள்கைகளை, திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஆகும்.

இன்னும் குறிப்பாக சர்வதேச தாய்மொழி தினம் 2024 பலமொழி கல்வி கொள்கையை செயல்படுத்துவதன் தேவையை முன்னிலைப்படுத்துகிறது. இதன் மூலம் அனைத்து குழந்தைகளும் தரம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் அவர்களின் நினைவாற்றல் மற்றும் நினைவாற்றல் தவிர்த்த பிற திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்.

இந்த கொண்டாட்டங்கள் பலமொழி கல்விக்கு, பல சூழல்களிலும், தாய்மொழியின் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பூர்வீக மொழிகளின் ஆவணக் காப்பகங்களுக்குள்ளும், உள்நாட்டு மொழிகளின் சர்வதேச பத்தாண்டு (2022-2032) மூலம் பழங்குடியின மக்களிடம் உள்ள அறிவை மேம்படுத்துதல்; மற்றும் கலாச்சார உரையாடலில் மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.

யார் குறி?

கல்வியில் தொடர்புடையவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள்.

என்ஜிஓக்கள், அறக்கட்டளைகள் மற்றும் பலமொழிகளை ஆதரிக்கும் மற்ற அமைப்புகள் மற்றும் பலமொழி கல்வி மற்றும் கலாச்சார மொழி வேற்றுமை குழுக்கள்

தாய்மொழி தினம் ஏன்?

சர்வதேச தாய்மொழி தினம், சர்வதேச சமூகத்துக்கு பலமொழிக்கல்வியின் அவசியம் குறித்தும், அது கற்றலை எப்படி வளர்க்கிறது என்பது குறித்தும் விளக்கும். கல்விக்கு தாய்மொழியில் கற்பிப்பதுதான் மிகவும் முக்கியம். திறன்களை அறிவாக்க தாய் மொழி கல்வியால் மட்டும்தான் முடியும். ஒருவரின் தாய் மொழியில் கற்பது ஒருவருக்கு புரிதலையும், உடையாடலையும் வலியுறுத்துகிறது.

அதுதான் சிந்தனையையும் மேம்படுத்திகிறது. அது தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அது நல்ல பங்களிப்பை செய்ய உதவுகிறது. கற்றலை ஊக்குவிக்க, பலமொழி கல்வி, தலைமுறை கடந்த கற்றலை ஊக்குவிக்கிறது. அது கலாச்சாரம், பாரம்பரியம், மொழி என அனைத்தையும் பாதுகாக்க உதவுகிறது. உள்நாட்டு மொழிகளையும், கற்றலையும் ஊக்குவிக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்