International Left Handers Day 2024 : சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்ளலாமா?
International Left Handers Day 2024 : சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்ளலாமா? இன்று இடது கை பழக்கமுடையோர் தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம், இடது கை பழக்கம் உடையவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் வலது கை பழக்கம் உடையவர்களால் நிறைந்துள்ளது. அதனால் அவர்களுக்கு தேவையான வகையில்தான் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் வாழும் இடது கை பழக்கமுடையவர்கள் சந்திக்கும் சவால்கள் என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம்.
இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த வகையில் நீங்களும் இந்த நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயலலாம். உங்கள் பள்ளி அல்லது கல்லூரிகளில் இந்த நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் அல்லது சமூக வலைதளங்களில் இடதுகை பழக்கமுடையோர் தினம் ஹேஷ்டாக் போட்டு உங்களுக்கு தொடர்பில் உள்ள இடது கை பழக்கமுடையோருக்கு இனிய இடது கை பழக்கமுடையோர் தின வாழ்த்துக்களை பரிமாறலாம்.
கடவுள் உங்களிடம் உங்களின் இலக்கை எழுதுங்கள் என்று கூறும்போது, நீங்கள் அதை எந்த கையால் எழுதுவேண்டும் என்று கூறுவதில்லை. எனவே இடது கை பழக்கமுடையோர்களின் தனித்தன்மையை கொண்டாடுங்கள். இந்த நாளின் கருப்பொருள் உள்ளிட்டவை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உலக மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த தனித்தன்மை வாய்ந்தவர்களை கொண்டாடுவதற்கு இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது. அவர்களின் தனித்திறமைகள், பலம் மற்றும் அவர்கள் ஏற்றுக்கொண்ட சவால்களுக்கு நாம் வாழ்த்து கூறவேண்டும்.
இந்தாண்டு 31வது ஆண்டு சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் கொண்டாடப்படுகிறது.
கருப்பொருள்
சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம், இடது கை பழக்கமுடையவர்களின் தனித்தன்மையை கொண்டாடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாளுக்கென்று குறிப்பிட்ட கருப்பொருள் என்று ஒன்று கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் ஒரு பொதுவாக குறிக்கோளுடன், அதாவது இடது கை பழக்கமுடையவர்களை கொண்டாடுவதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
இடது கை பழக்கமுடையோர் தின வாழ்த்துக்கள்
நீங்கள் ஒரு இடது கை பழக்கமுடைய நபர் என்பது உங்களுக்கு பெருமை என்றே கருதுகிறேன். நான் உங்களை எனது நண்பர் என்று கூறிக்கொள்வது எனக்குப் பெருமை. இனிய சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தின வாழ்த்துக்கள்.
நீங்கள் எந்த கையை பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் அதன் மூலம் அன்பை மட்டுமே விதைக்கவேண்டும். இனிய சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தின வாழ்த்துக்கள்.
இடதுகை பழக்க முடையோர்கள் இல்லாத வாழ்க்கை சரியாக இருக்காது – மான்ஸ்கே.
இடது கை பழக்கமுடையவர்கள் மதிப்புமிக்கவர்கள். அவர்கள் அசவுகர்யமான இடங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் – விக்டர் ஹீயுகோ.
இடது கை பழக்கம் உடையவர்கள் வித்யாசமானவர்கள் கிடையாது. தனித்தன்மையானவர்கள். இவர்கள் தனித்தன்மையானவர்கள், ஏனெனில் அவர்கள் வித்யாசமானவர்கள் – பீட்டர் கோலே சி.ஓனெலே.
மூளையின் இடது பாதிதான் உடலின் வலது பாதி பாகத்தை கட்டுப்படுத்துகிறது. எனவேதான் இடது கை பழக்கமுடையோர் சரியான பாதையில் சிந்திக்கிறார்கள் என்பது பொருள் – ஃபீல்ட்ஸ்.
உங்கள் வலது மூளை, இடது மூளை என்ன செய்யும் என்று சிந்திக்கவேண்டாம் – ஜார்ஜ் பெர்னாட் ஷா.
வரலாறு
சர்வதேச இடதுகை பழக்கமுடையவர்கள் கிளப்பை தோற்றுவித்த, டீன் ஆர். கேம்ப்பல் என்பவர்தான், 1976ம் ஆண்டு சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினத்தை முதலில் கடைபிடித்தார். இடது கை பழக்கத்தினால் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை இந்த நாள் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முழுவதும் வலது கை பழக்க முடையவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இடது கை பழக்கமுடையவர்கள் தனித்தன்மையுடன் நிற்கிறார்கள். இதை கொண்டாடுவது கட்டாயம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்