International Sign Language Day: மன ஓட்டங்களை சைகைகளாக வெளிப்படுத்தும் மக்கள்! சர்வதேச சைகை மொழி தினம்!
International Sign Language Day:உலகில் ஏறத்தாழ 7 கோடி மக்கள் காது கேளதவர்களாகவும், வாய் பேச முடியதாவர்களாகவும். இருக்கின்றனர். இவர்களுக்குள் 300 விதமான சைகை மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் 97 உறுப்பு நாடுகள் மற்றும் உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் செப்டம்பர் 23 (இன்று )அன்று சர்வதேச சைகை மொழி தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகில் ஏறத்தாழ 7 கோடி மக்கள் காது கேளதவர்களாகவும், வாய் பேச முடியதாவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்குள் 300 விதமான சைகை மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
1951 ஆம் ஆண்டும் செப்டம்பர் 23 அன்று உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொழி தோன்றாத ஆதி காலத்தில் மனிதர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்த சைகை மொழிகளை பயன்படுத்தினர். இதுவே உலகில் தோன்றிய முதல் மொழி ஆகும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பரிதாபமாக பார்க்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகள் சம உரிமையோடு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
சர்வதேச அளவிலான சைகை மொழி தினம்
உலக அளவில் அனைத்து காது கேளாதோர் மற்றும் பிற சைகை மொழி பயனர்களின் மொழியியல் அடையாளம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் இந்த சர்வதேச சைகை மொழிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக காதுகேளாதோர் கூட்டமைப்பின்படி, உலகம் முழுவதும் 70 மில்லியனுக்கும் அதிகமான காது கேளாதோர் உள்ளனர். அவர்களில் 80% க்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். மொத்தமாக,அவர்கள் 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
சைகை மொழிகள் பேச்சு மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும். உலக அளவில் பின்பற்றப்படும் ஒரு சர்வதேச சைகை மொழியும் புழக்கத்தில் உள்ளது, இது காதுகேளாதவர்களால் சர்வதேச கூட்டங்களில் மற்றும் முறைசாரா முறையில் பயணம் செய்யும் போது மற்றும் பழகும்போது பயன்படுத்தப்படுகிறது. இது சைகை மொழியின் பிட்ஜின் வடிவமாகக் கருதப்படுகிறது. இந்த சர்வதேச பொதுவான சைகை மொழி மிகவும் எளிமையான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சமமான வாய்ப்பு
உலக அளவில் பல வளர்ந்து வரும் நாடுகளிலும், மாற்றுத் திறனாளிகள் இயல்பாக இயங்கும் வகையிலான எந்த வித ஏற்பாடுகளும் இல்லை. மாற்றாக எந்த வித குறைபாடும் இல்லையெனில் மட்டுமே இந்த சமுதாயத்தில் இயல்பான வாழ்க்கையை கடை பிடிக்க முடியும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளிலும், நகரங்களை தாண்டி மற்ற பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதில்லை. அவர்கள் மீதான கருணை, இரக்கம் போன்றவைகளுக்கு பதிலாக அவர்களுக்கு பொது சமூகத்தில் இயல்பாக இயங்கும் வசதிகளை அமைத்து தருவதே சரியான முடிவாகும். இதனையே சரவதேச காதுகேளாதோர் கூட்டமைப்பும் வலியுறுத்துகிறது.
மேலும் சர்வதேச அளவில் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான மாநாடு சைகை மொழிகளின் பயன்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது. சைகை மொழிகள் பேச்சு மொழிகளுக்கு சமமானவை என்பதை இது தெளிவுபடுத்துகிறது மற்றும் சைகை மொழியைக் கற்கவும் காது கேளாதோர் சமூகத்தின் மொழியியல் அடையாளத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு நாடுகளையும் கட்டாயப்படுத்துகிறது. மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக சைகை மொழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இது அங்கீகரிக்கிறது
டாபிக்ஸ்