International Day of Action for Women's Health 2024 : பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தின முக்கித்துவம்!
International Day of Action for Women's Health 2024 : பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தின முக்கித்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
International Day of Action for Women's Health 2024 : பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் 2024 ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உரிமை உண்டு. ஆனால் அவர்கள் பெரும்பாலும் அடக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு ஆளாகிறார்கள். அவரிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இருப்பினும், அவர்கள் பெரும்பாலும் அடக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
தனித்திருத்தலுக்கான உரிமை, கல்விக்கான உரிமை, பாலியல் சுதந்திரம் மற்றும் இனப்பெருக்க உரிமை ஆகியவை அவர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானவை மற்றும் எல்லா நிலையிலும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும், பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் கொண்டாடப்படுகிறது.
அன்று பெண்கள், தங்கள் குரல்களை உயர்த்தவும், தங்களுக்காக எழுந்து நின்று தங்கள் உரிமைகளைக் கோரவும் வலியுறுத்துகிறது. முக்கியமான நாளைக் கொண்டாட நாம் தயாராகும்போது, நாம் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நாள்
ஒவ்வொரு ஆண்டும், மே 28 அன்று பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் செவ்வாய்க்கிழமை அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.
வரலாறு
1987 ம் ஆண்டில், கோஸ்டா ரிகாவில் நடந்த பெண்கள் கூட்டத்தின்போது, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பெண்கள் சுகாதார நெட்வொர்க் (LACWHN) ஒவ்வொரு ஆண்டும், மே 28 ஐ பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.
இது லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இனப்பெருக்க உரிமைகளுக்கான பெண்கள் உலகளாவிய நெட்வொர்க் (WGNRR) உலகளவில் இந்த நாளை விளம்பரப்படுத்தியது. இந்த நாள் பெண்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
கருக்கலைப்பு உரிமைகளின் முக்கியத்துவம், எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ், வறுமை, பாலியல் சுயாட்சி மற்றும் கருத்தடைகளின் பயன்பாடு குறித்த உரையாடல்களைத் தொடங்குகிறது.
முக்கியத்துவம்
இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான சிறந்த வழி, உலகெங்கிலும் நடந்த பிரச்சாரங்கள் குறித்து நமக்கு நாமே கற்பித்துக்கொள்ளவேண்டும். பெண்கள் தங்கள் குரல்களை உயர்த்தவும் உரிமைகளைக் கோரவும் வலியுறுத்துகிறது. பெண்களுக்கு தகுதியான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்கான அழைப்பும் இதுதான்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம், பொதுமக்கள், அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து, பெண்களின் அவல நிலையைப் புரிந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யக்கூடிய சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
கடந்த காலங்கள் பெண்கள் அடிமையாக்கப்பட்டு, போகப்பொருட்களாக விற்பனை செய்யப்பட்ட அவலங்கள் எல்லாம் உலகில் நடந்தேறியுள்ளது. அவற்றில் எல்லாம் இருந்து பெண்கள் மீண்டு வந்து, போராடி தங்களை நிலைநாட்டி, இன்று ஆணுக்கு பெண் சரிநிகர் என்பதை நிரூபித்து பல்வேறு துறைகளிலும் ஜொலித்து வருகிறார்கள்.
இந்த காலத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் எத்தனை முக்கியமோ அதேஅளவுக்கு அவர்களின் ஆரோக்கியமும் அவசியம் என்பதால்தான் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.
எனவே இந்த நாளில் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள, ஒரு ஆரோக்கியமான பழக்கத்தை கடைபிடிக்கத்துவங்குங்கள். அது உங்களுக்கான நேரம் ஒதுக்குவது, உடற்பயிற்சி அல்லது ஆரோக்கிய உணவு உட்கொள்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
டாபிக்ஸ்