தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  International Day For Street Children : சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் உண்மைகள்!

International Day for Street Children : சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் உண்மைகள்!

Priyadarshini R HT Tamil
Apr 12, 2024 06:00 AM IST

International Day for Street Children : உலகம் முழுவதும் 150 மில்லியன் குழந்தைகளுக்கு மேற்பட்டவர்கள், இதை ஐநா வெளியிட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற நகரங்களில்தான், தெருவோரக் குழந்தைகள் காணப்படுகிறார்கள்.

International Day for Street Children : சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் உண்மைகள்!
International Day for Street Children : சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் உண்மைகள்! (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

புள்ளிவிவரத்தில் இருந்து விடுபடும் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏப்ரல் 12ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தெருவோர குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திறன் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை சிறப்பாக்க உதவுகிறது.

யுனிசெஃபின் விளக்கப்படி, 18 வயதுக்கு கீழான ஆண் மற்றும் பெண் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள், தெருவில் வேலை செய்யும் குழந்தைகள், பாதுகாப்பும், கண்காணிப்பும் இல்லாமல் தெருவில் விடப்பட்ட குழந்தைகள் தெருவோரக் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். தெருவோரக் குழந்தைகள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

தெருவோரத்தில் குடும்பத்துடன் வசிப்பவர்கள்

தெருவோரத்தில் பணிபுரிபவர்கள்

அனாதைகள் மற்றும் கைவிடப்பட்டவர்கள்

வரலாறு

உலகம் முழுவதும் 150 மில்லியன் குழந்தைகளுக்கு மேற்பட்டவர்கள், இதை ஐநா வெளியிட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற நகரங்களில்தான், தெருவோரக் குழந்தைகள் காணப்படுகிறார்கள். 

அதிக மக்கள்தொகை கொண்ட மெட்ரோபாலிட்டன் மையங்கள், வளரும் அல்லது பொருளாதார ரீதியாக நிலையில்லாத இடங்களில் இந்த நிகழ்வு, அதிகம் நடக்கிறது. 

அவை ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை ஆகும். இங்குள்ள குழந்தைகளுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட அவர்களால் பெறமுடியாது.

1989ம் ஆண்டு ஐநா, ஒரு மாநாட்டை நடத்தியது. உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு பின்வரும் உரிமைகள் கொடுக்கப்படுகின்றன. அந்த மாநாட்டில் அவை விவாதிக்கப்பட்டன. 

பாதுகாப்பு உரிமை, வளர்ச்சி சூழல், சம உரிமை, சுதந்திரம் மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை என அவை கொடுக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கான நாள் சர்வதே தெருவோர குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டது.

முக்கியத்துவம்

தெருவோர குழந்தைகளுக்கு கவ்லி, சுகாதாரம் மற்றும் கண்ணியம் ஆகியவை எப்போதும் மறுக்கப்படும். தெருவோரக் குழந்தைகள் சந்திக்கும் இந்த பிரச்னைகளை குறைக்க, தெருவோரக் குழந்தைகளுக்கான கூட்டமைப்பு, போன்ற நிறுவனங்கள் பணிபுரிகின்றன. அதற்காக அவை 4 அடுக்கு சம உரிமையை கூறுகின்றன.

அவை சமஉரிமை, ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாப்பது, சேவைகளை வழங்குவது மற்றும் புதிய யோசனைகளுடன் வருவது ஆகியவை ஆகும். சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்

தெருவோரக் குழந்தைகளின் பாடுகள் மீது கவனம் செலுத்துவது மற்றும் அவர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்புடன் இருப்பிட வசதி பெறும் உலகை உருவாக்க வேண்டும். இது மனித உரிமையை பாதுகாக்க உறுதியளிக்கிறது.

சிறிய அன்பு தேவைப்படுபவர்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்க இந்த நாள் வாய்ப்பளிக்கிறது.

இந்த நாளில் மனித உரிமை மையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கருத்தரங்கங்கள், உரையாடல்கள் நடத்துகின்றன. அதற்க நிதி திரட்டுகின்றன. இந்த நாள் குழந்தைகள் கற்கவும், தெருவோரக் குழந்தைகளின் பாடுகளை மற்றவர்களுக்கு உணர்த்தவும் கடைபிடிக்கப்படுகிறது.

தனிநபராக ஒருவர், தெருவோரக் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக பாடுபடலாம். நிதி கொடுக்கலாம், நிதி கொடுப்பவர்களை ஊக்கிவிக்கலாம், அமைச்சக்கத்துக்கு உதவலாம், தெருவோரக் குழந்தைகள் சந்திக்கும் கஷ்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவலாம்.

தொருவோர குழந்தைகளுக்கு குடும்பமும், மறுவாழ்வும் ஏற்படுத்தி தருவது அரசு மற்றும் மனித உரிமை மையங்கள் மற்றும் தனிநபரின் கூட்டு முயற்சியாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்