International Dance Day 2024 : சர்வதேச நடன தின வரலாறு, முக்கியத்துவம் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  International Dance Day 2024 : சர்வதேச நடன தின வரலாறு, முக்கியத்துவம் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதைதான்!

International Dance Day 2024 : சர்வதேச நடன தின வரலாறு, முக்கியத்துவம் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதைதான்!

Priyadarshini R HT Tamil
Published Apr 29, 2024 05:45 AM IST

International Dance Day 2024 : இந்த நாள் நடனம், கல்வி, ஆரோக்கிய மற்றும் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் ஒரு நாளாக உள்ளது. புரிதலை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் எல்லை கடந்த உரையாடல்கள் நடைபெறுகிறது. தனித்தன்மையான பழக்கவழக்கங்களை கொண்டாடுகிறது.

International Dance Day 2024 : சர்வதேச நடன தின வரலாறு, முக்கியத்துவம் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதைதான்!
International Dance Day 2024 : சர்வதேச நடன தின வரலாறு, முக்கியத்துவம் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதைதான்!

நடனம் என்ற கலைக்கு உலகளவில் கொடுக்கப்படும் அங்கீகாரம்தான் சர்வதேச நடன தினம். சர்வதேச நாடக மையத்தின் நடன கமிட்டி இந்த நாளை உருவாக்கியது. இம்மையம் யுனெஸ்கோவின் அங்கம். நிகழ்த்து கலைகளின் கூட்டாளி. ஜீன் ஜார்ஜஸ் நோவரே (1727 – 1810) பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நவீன பாலே நடனத்தை பிரபலப்படுத்தியவர்.

இந்த நாளில் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நடனங்கள் நிகழ்த்தப்படுகிறது. அது இந்த நாளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. யுனெஸ்கோ, அலுவல் ரீதியாக சர்வதேச நடன மையத்தை இந்த கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக அங்கீகரித்துள்ளது.

சர்வதேச நடன தின வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நடன தினம் ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த நாள் திங்கட்கிழமை அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சர்வதேச நாடக மையத்தின் நடனக்குழு துவக்கியது. நிகழ்த்துக்கலைகளுக்கு யுனெஸ்கோ ஒரு முக்கிய கூட்டாளி ஆகும்.

சர்வதேச நடன தினம், நடனத்தை ஒரு கலையாக கொண்டாடுவதற்காகவும், அதன் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் காட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்டது. நடனம் நமது வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்களை நாம் உணரவேண்டும். இந்த நாள் பிரெஞ்ச் பாலே நடன கலைஞர் ஜீன் ஜார்ஜஸ் நொவரேவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

முதல் சர்வதேச நடன தினம் 1982ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது முதல் இது வளர்ந்து உலகளவிலான கொண்டாட்டமாகவும், நடன பள்ளிகள், நிறுவனங்கள், மையங்கள் ஒருங்கிணைக்கும் விழாக்களின் அணிவகுப்பாகவும் உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல்வேறு நடனங்கள் நிகழ்த்தப்படுகிறது.

நடன பயிற்சி பட்டறைகள், நடன விழாக்கம், நடனம் குறித்த பேச்சு மற்றும் மற்ற நடவடிக்கைகள் என இந்த நாளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நடனம் மற்றும் அதன் கலாச்சாரம், முக்கியத்துவம் குறித்து பேசப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நடன மையம், ஒரு சிறப்பு வாய்ந்த நடன கலைஞரை தேர்ந்தெடுக்கிறது.

அவர் இந்த சர்வதேச நடன நாளில் ஒரு செய்தியை எழுதுகிறார். அது உலகம் முழுவதும் பகிரப்படுகிறது. சமூகத்தில் நடனத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் பிரதிபலிக்கிறது. கலாச்சார மாற்றத்தில் இதன் பங்கு மற்றும் இதுபோன்ற நாட்களின் மூலம் கலையை வெளிப்படுத்துவதன் மதிப்பு என இந்த நாள் கழிகிறது.

சர்வதேச நடன தினத்தின் முக்கியத்துவம்

சர்வதேச நடன தினம் உலகளவிலான கொண்டாட்டம் ஆகும். இந்த நாளை சர்வதேச நாடக மையம் உருவாக்கியது. இது கலை மற்றும் கலாச்சார வேற்றுமை மற்றும் நடனம் ஏற்படுத்தும் மாற்றத்தின் சக்தியை பெருமைப்படுத்துகிறது. உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கிறது. இந்த பழமையான கலையின் வழியான மனித தொடர்புகளை அது அங்கீகரிக்கிறது.

இந்த நாள் நடனம், கல்வி, ஆரோக்கிய மற்றும் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் ஒரு நாளாக உள்ளது. புரிதலை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் எல்லை கடந்த உரையாடல்கள் நடைபெறுகிறது. தனித்தன்மையான பழக்கவழக்கங்களை கொண்டாடுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.