Tamil News  /  Lifestyle  /  Interesting Information About Human Body
மனித உடல்
மனித உடல்

Human Body: உச்சி முதல் பாதம் வரை.. வியப்பூட்டும் உடல் தகவல்கள் இதோ..!

26 May 2023, 17:16 ISTKarthikeyan S
26 May 2023, 17:16 IST

வியப்பூட்டும் உடல் தகவல்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

மனித உடல் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

  • மனித மூளை சுமார் 50,000 வாசனைத் திரவியங்களைக்கூட நினைவில் வைக்கும் திறன் படைத்தவையாம்.
  • மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
  • மூளை பயன்படுத்தும் சக்தி ஒரு 25 வாட் பல்பை எரிய வைக்கப் போதுமானது.
  • கண்கள் வளர்வதில்லை, பிறக்கும் போது இருந்த அதே அளவில்தான் இருக்கும். ஆனால், காதுகளும், மூக்கும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
  • மனித இதயம் நாளொன்றுக்கு 1,00,000 தடவைகள் துடிக்கிறது.
  • சிறுகுடல் 750 செ.மீ நீளமுடையது.
  • பெருங்குடலுக்கு 150 செ.மீ நீளம்தான். ஆனால், அது சிறுகுடலை விடவும் மூன்று மடங்கு அதிக அகலமானது.
  • மூளை மணிக்கு 375 கி.மீ வேகத்தில் தகவல்களை அனுப்புகிறது.
  • மனித உடலின் மொத்த ரத்தக் குழாய்களின் நீளத்தையும், அவற்றின் துவக்கம் முதல் முடிவு வரை அளவீடு செய்தால் அது சுமார் 90,000 கி.மீ நீளத்துக்கு இருக்குமாம்.
  • நம் உடலில் நகங்கள், முடி மட்டும் வெட்ட வெட்ட வளர்கிறது. தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போதே நகமும் முடியும் வளர்கிறது.
  • கண்களை திறந்தபடி நம்மால் தும்மவே முடியாது. தும்மும் போது இதயம் உட்பட உடலின் அனைத்து இயக்கங்களும் நின்று போகும்.
  • கண்களால் 10 மில்லியன் அளவுள்ள வெவ்வேறு வண்ணங்களை வேறுபடுத்த முடியும்.
  • ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
  • கண் இமை மயிர்களின் ஆயுள் 150 தினங்கள். கண் இமைகள் நாளொன்றுக்கு 20,000 தடவைகள் சிமிட்டுகின்றன.
  • உடலில் அடிக்கடி தோல் உரியும், வாழ்நாள் முழுதும் உரியும் தோலின் மொத்த எடை 18 கிலோ என கண்டறியப்பட்டுள்ளது
  • உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது ரத்தத்தில் உள்ள சிவப்பணு. இது உடலை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் 60 நொடிகள்.
  • எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வேலை பார்க்கிறோமோ, அவ்வளவு வேகமாக விரல் முனைகளைப் பாதுகாக்க நகமும் வேகமாக வளர்கிறது. எனவேதான் நகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
  • காது மடல்கள் அற்புதமான வடிவத்தில் உள்ளன. இவை இல்லாவிட்டால், சத்தம் நேரடியாக தலைக்குள் மோதி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும்.
  • மனித தோளின் ஒவ்வொரு சதுர இஞ்ச் பகுதியிலும் சுமார் 600 செ.மீ. அளவுக்கு இரத்த செல்கள் இருக்கின்றனவாம்.
  • தனது ஒரு பகுதி அகற்றப்பட்டாலும் கூட மீண்டும் தன்னைத்தானே மீள் உற்பத்தி செய்து கொள்ளும் உடலின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்.
  • நாளென்றுக்கு 5 முதல் 6 லிட்டர் ரத்தம், 20 லட்சம் நெஃப்ரான்களால் 37 தடவைகள் சுத்திகரிக்கப்படுகிறது.
  • மனித உடல்களில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639 ஆகும்.

டாபிக்ஸ்