Intelligent People : அறிவாளிகளாக வலம் வருவது எப்படி? அதிபுத்திசாலிகள் செய்வது இதைத்தான்!
Intelligent People : அறிவாளிகளாக வலம் வருவது எப்படி என்று தெரியுமா? அவர்கள் அதிபுத்திசாலிகள் ஆவதற்கு என்ன செய்தார்கள் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் அறிவாளிகளாக வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் இந்த விஷயங்களை கடைபிடியுங்கள். ஏனெனில் அறிவாளிகளும், அதிபுத்திசாலிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
நீங்கள் புத்திசாலிகளிடம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் தெரியுமா?
நீங்கள் எப்போது புத்திசாலிகள் எப்படி புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டா? இதற்கு காரணம் அவர்களின் மனஉறுதி மட்டுமல்ல, அவர்களின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும்தான். அதிபுத்திசாலிகளிடம் இருந்து நீங்கள் கற்கவேண்டிய விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தொடரந்து கற்றல்
கருத்தரங்கங்களில் கலந்துகொள்வது, வாசிப்பு, ஆழ்ந்த வாசிப்பு, புதிய திறன்களை கற்பது, எந்த சூழலையும் ஏற்றுக்கொள்வது, மன வேதனைகளை தவிர்க்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்வது என அவர்களிடம் தொடர் கற்றல் இருக்கும்.
சமூக தொடர்பு
சமூகத்தில் உள்ளவர்களுடன் அவர்கள் நேர்மறையான உறவை பராமரிப்பார்கள். இது அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு உதவும். அவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும். அவர்களக்கு உணர்வுரீதியான ஆதரவையும் தரும். அவர்களின் கோணத்தை மாற்றும்.
நேர மேலாண்மை
அவர்களின் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பார்கள். அவர்கள் மனஅழுத்தத்தை குறைக்க முன்னுரிமை கொடுப்பார்கள். சரியான நேரத்தில் வேலைகள் செய்யப்படாமல் இருப்பதுதான் மனஅழுத்தம் ஏற்பட காரணமாகிறது. எனவே அதை குறைக்க அத்தனையும் செய்வார்கள். அவர்கள் கவனம் எப்போதும் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் இலக்குகளை நோக்கியே இருக்கும்.
அமைதிக்கு நேரம்
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, யோகா அல்லது மனஅழுத்தத்தை போக்கும் பழக்கவழக்கங்கள் போன்ற அமைதிப்படுத்தும் திறன்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது அவர்களின் மனநிலையை மாற்றும். அவர்களின் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவும்.
சுறுசுறுப்பு
உங்கள் இதய ஆரோக்கியம் சிறக்கவேண்டுமெனில், நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும். எப்போதும் எதையாவது செய்துகொண்டு இருக்கவேண்டும். இதனால் உங்கள் உடல் எண்டோஃபின்களை வெளியிட்டு, உங்கள் மனநிலையை மாற்றும். உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். உங்கள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உணவு
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்ண்டும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். உங்கள் உடலின் ஆற்றல் அளவு மற்றும் மூளையின் திறனையும் அதிகரிக்கும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொள்வதும் நல்லது.
போதிய உறக்கம்
தினமும் 7 முதல் 9 மணி நேர உறக்கம் என்பது இன்றியமையாதது. ஒவ்வொரு இரவும் கட்டாயம் இந்த அளவு நேரம் நீங்கள் உறங்க வேண்டும். இது உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. உங்கள் நினைவுகளை ஒருமுகப்படுத்துகிறது. உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
நீர்ச்சத்து
நாள் முழுவதும் நீங்கள் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். தொடர்ந்து பருகிக்கொண்டே இருக்கும்போதுதான் அது உங்கள் உடலில் உள்ள செல்கள் வேலை செய்ய உதவுகிறது. மேலும் உங்கள் உடலின் ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது. உங்கள் நினைவாற்றல் மற்றும் உங்களின் கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே புத்திசாலிகள் தங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே நீங்களும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
நன்றி
நீங்கள் நன்றி செலுத்தவேண்டிய விஷயம் குறித்து, எழுதுங்கள். இது உங்களுக்கு நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கும். உங்களின் மீள்திறனை உயர்த்தும். உங்களின் ஒட்டுமொத்த மனஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் திருப்தியை ஏற்படுத்தும்.
டாபிக்ஸ்