Instant Vathal Kulambu Podi : இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு பொடி! தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால் குழம்பு ரெடி!
Instant Vathal Kulambu Podi : இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு பொடி! தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால் குழம்பு ரெடி!
தேவையான பொருட்கள்
வரமல்லி – 100 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் – ஒரு டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 15
புளி – 20 கிராம்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மணத்தன்னாளி வத்தல் – 20 கிராம்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
வர மல்லி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம், சோம்பு, மிளகு, வெள்ளை எள், வர மிளகாய், புளி ஆகிய அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வறுக்க வேண்டும்.
அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். அதைத்தையும் சேர்த்து நன்றாக ஆறவிடவேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், உப்பு, வெல்லம், பெருங்காயத்தூள் என அனைத்தும் சேர்த்து, ஒரு காய்ந்த மிக்ஸிஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இது முதலில் அரைபடாது என்பதால், சலித்து, சலித்து, மீண்டும், மீண்டும் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் கடுகு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து இந்த பொடியில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேர்த்து 6 மாதங்கள் வரை அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
பின்னர் உங்களுக்கு குழம்பு வைக்க முடியாத நாட்களில் இதை வைத்து ஈசியாக குழம்பு தயாரித்துவிடலாம்.
இந்தப்பவுடரில் 2 ஸ்பூன் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்தால் இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் இருந்தாலே போதும்.
ஒரு அவசரமான சமையல் செய்ய வேண்டிய நாளிலோ அல்லது ஏதேனும் சுற்றுலா சென்றாலே இந்த குழம்பை நீங்கள் தயார் செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்