Infertility Home Remedy : இந்த குட்டியூண்டு பொருள் போதும்! குழந்தையின்மை பிரச்னையை குணப்படுத்தும்!
Infertility Home Remedy : இந்த குட்டியூண்டு பொருளே உங்கள் குழந்தையின்மை பிரச்னையை குணப்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
குழந்தையின்மை
குழந்தையின்மை தம்பதியரிடையே இன்று பொதுவான ஒரு பிரச்னையாக உள்ளது. ஓராண்டுக்குப்பின்னரும், பாதுகாப்பற்ற உடலுறவால் குழந்தை பெறாமல் இருப்பது குழந்தையின்மை என்று அழைக்கப்படுகிறது. 2023ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி உலகம் முழுவதில் 6ல் 1 தம்பதி குழந்தையின்மையால் அவதிப்படுகிறார்கள். இது தம்பதிகளுக்கு சவாலான காலகட்டமாக உள்ளது.
தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் இந்த பிரச்னை குறித்து கண்டுபிடிக்கப்படும்போதே பிரச்னைகள் ஏற்பட துவங்கிவிடுகிறது. முதலிலே இது உளவியல் மற்றும் உணர்வு ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
துவக்க காலத்தில் தம்பதிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். குழப்பங்கள், விரக்தி, கோவம், துக்கம், துன்பம், பாதிக்கப்பட்டவர்கள் போன்ற மனநிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
இது இறுதியில் உங்கள் தன்னம்பிக்கையை குலைத்துவிடும். இது நிறைய தம்பதிகளிடையே பிரச்னைகளை எற்படுத்துகிறது. எனவே இதை தீர்க்க முதலில் இயற்கை வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தையின்மைக்கு இயற்கையான முறையில் தீர்வுதரும் கசகசா
கசகசா என்றால் அது தூக்கமின்மைக்கு உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கசகசாவால் குழந்தையின்மையை போக்கவும் முடியும். குழந்தையின்மையைப் போக்க ஆண்கள் கசகசாவை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.
தேவையான பொருட்கள்
கசகசா – ஒரு ஸ்பூன்
கிராம்புப் பொடி – 2 சிட்டிகை
பசும் பால் – ஒரு டம்ளர்
ஜாதிக்காய்ப் பொடி – 2 சிட்டிகை
செய்முறை
இரவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் கசகசாவை ஊறவைக்கவேண்டும். அதை அரைத்து பால் பிழிந்து, அந்த பாலையும், பசும்பாலையும் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து இதில் ஜாதிக்காய்ப் பொடி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் சாப்பிடவேண்டும்.
பெண்கள் கசகசாவை எடுத்துக்கொள்ளும் முறைகள்
கசகசாவை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். ஏதேனும் ஒரு பழத்தை நறுக்கி, அதில் இந்தப்பொடியை அரை ஸ்பூன் தூவி சாப்பிடவேண்டும்.
பெண்கள் மாதவிடாய் வந்த 7 முதல் 15 நாட்கள் மட்டும் எடுத்தால் போதுமானது. மற்ற நாட்களில் எடுக்கத் தேவையில்லை.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்