Indian Toilet Vs Western Toilet : இந்தியன் டைப் டாய்லெட் வெஸ்டர்ன் டைப் டாய்லெட் எது பயன்படுத்துவது சிறந்தது? எது ஆபத்து
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Indian Toilet Vs Western Toilet : இந்தியன் டைப் டாய்லெட் வெஸ்டர்ன் டைப் டாய்லெட் எது பயன்படுத்துவது சிறந்தது? எது ஆபத்து

Indian Toilet Vs Western Toilet : இந்தியன் டைப் டாய்லெட் வெஸ்டர்ன் டைப் டாய்லெட் எது பயன்படுத்துவது சிறந்தது? எது ஆபத்து

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 13, 2024 07:00 AM IST

Indian Toilet Vs Western Toilet: பல வீடுகளில் மேற்கத்திய கழிப்பறைகள் இருக்கின்றன. இன்று பெரும்பாலும் மால்கள், தியேட்டர்கள் போன்ற பொது இடங்களில் வெஸ்டர்ன் டைப் கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறையை பலரும் விரும்புவதில்லை. பலர் இந்திய பாணி கழிப்பறைகளை விரும்புகிறார்கள். மேற்கத்திய கழிப்பறைகள் வசதியானவை

இந்தியன் டைப் டாய்லெட் வெஸ்டர்ன் டைப் டாய்லெட் எது பயன்படுத்துவது சிறந்தது?
இந்தியன் டைப் டாய்லெட் வெஸ்டர்ன் டைப் டாய்லெட் எது பயன்படுத்துவது சிறந்தது?

பல வீடுகளில் மேற்கத்திய கழிப்பறைகள் இருக்கின்றன. இன்று பெரும்பாலும் மால்கள், தியேட்டர்கள் போன்ற பொது இடங்களில் வெஸ்டர்ன் டைப் கழிப்பறைகள் உள்ளன. ஆனால் இந்த கழிப்பறையை பலரும் விரும்புவதில்லை. பலர் இந்திய பாணி கழிப்பறைகளை விரும்புகிறார்கள். மேற்கத்திய கழிப்பறைகள் வசதியானவை என்று கூறப்பட்டாலும், அவற்றில் பல குறைபாடுகளும் உள்ளன.

உடற்பயிற்சி

இந்தியக் கழிவறைகளில் உட்கார்ந்து நிற்பது தினசரி உடற்பயிற்சியாகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. நம்மில் பலருக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும், அதை நாம் புறக்கணிக்கிறோம். இந்தியக் கழிவறைகளில் அமர்ந்திருப்பது ஒரு சிறிய உடற்பயிற்சி செயலாக இருக்கலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் கைகள் மற்றும் கால்களுக்கு நல்ல உடற்பயிற்சி என பார்க்கப்படுகிறது.

செரிமானத்திற்கு பயன்படுத்தவும்

இந்திய கழிவறைகளில் உட்காருவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. குந்துதல் உங்கள் வயிற்ளில் ஒரு வித அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது வயிற்றில் உள்ள உணவை அழுத்துவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. மேற்கத்திய பாணி கழிப்பறையில் உட்கார்ந்துகொள்வதால் வயிற்றில் எந்த அழுத்தமும் ஏற்படாது.

மேற்கத்திய கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பர் பயன்படுத்த வேண்டும். இது சாியானதல்ல. இந்த விஷயம் இந்தியர்களுக்கும் பெரும் பிரச்சனைகயாக உள்ளது. இந்திய கழிப்பறைகளை விட வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது

கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தியக் கழிவறைகளைப் பயன்படுத்துவது நல்லது. கருப்பையில் எந்த அழுத்தமும் இல்லை. இந்திய கழிப்பறையை தவறாமல் பயன்படுத்துவது சுமூகமான மற்றும் இயற்கையான பிரசவத்திற்கு தயாராகும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது உடற்பயிற்சி போல செய்யப்படுகிறது. மலச்சிக்கல், குடல் அழற்சி மற்றும் பிற காரணிகளின் சாத்தியத்தைத் தடுக்கிறது.

மேற்கத்திய கழிப்பறை பிரச்சனைகள்

மேற்கத்திய டாய்லெட் ஷீட்டிலும் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக கால் வலி பிரச்சனையால் உட்கார முடியாதவர்கள், மூட்டு வலி உள்ளவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் மிகவும் வசதியானது. ஆனால் இதனால் ஏற்படும் இழப்புகள் அதிகம். ஆரோக்கியமானவர்கள் கூட மேற்கத்திய கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்கள்.

வெஸ்டர்ன் டாய்லெட் செல்லும் பழக்கத்தால் உடலில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வயிற்றுப்போக்கு பல வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேற்கத்திய டாய்லெட் இருக்கையைப் பயன்படுத்தும் போது தோலின் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் கிருமிகள் எளிதில் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. அதன் அதிகப்படியான பயன்பாடு உடல்நலப் பிரச்சினைகளையும் அதிகரிக்கும். எனவே இந்திய கழிப்பறையை பயன்படுத்துங்கள்.

அதே சமயம் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில தொடர் சிகிச்சைகளை மேற்கொண்டவர்களுக்கு வெஸ்டர்ன் கழிப்பறைகளை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படியான நேரங்களில் கண்டிப்பாக வெஸ்டர்ன் டைப் டாய்லெட்களை பயன்படுத்த வேண்டும்.

அதேசமயம் எந்த கழிப்பறையாக இருந்தாலும் அதை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.