Male Health: ’அசைவம் சாப்பிடாமல் ஆண்மை பெருக வேண்டுமா?’ டாப் 5 உணவுகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Male Health: ’அசைவம் சாப்பிடாமல் ஆண்மை பெருக வேண்டுமா?’ டாப் 5 உணவுகள் இதோ!

Male Health: ’அசைவம் சாப்பிடாமல் ஆண்மை பெருக வேண்டுமா?’ டாப் 5 உணவுகள் இதோ!

Kathiravan V HT Tamil
Feb 06, 2024 07:50 AM IST

”ஆண்மை குறைவுக்கான பொதுவான மற்றும் வெளிப்படையான அறிகுறி பாலியல் செயல்பாடுகளுக்கு போதுமான விறைப்புத்தன்மையை அடைய அல்லது பராமரிக்க இயலாமை, லிபிடோ அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது ஆண்மை குறைவுக்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளது”

ஆண்மையை பெருக்க உதவும் சைவ உணவுகள்
ஆண்மையை பெருக்க உதவும் சைவ உணவுகள்

ஆண்மை குறைவுக்கான பொதுவான மற்றும் வெளிப்படையான அறிகுறி பாலியல் செயல்பாடுகளுக்கு போதுமான விறைப்புத்தன்மையை அடைய அல்லது பராமரிக்க இயலாமை,  லிபிடோ அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது ஆண்மை குறைவுக்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளது. 

ஆண்களில் தாது விருத்திக்கு மீன், முட்டை, மாட்டிறைச்சி, சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் இன்றி அமையாததாக உள்ளது. 

சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கான டாப் 5 உணவு பொருட்கள் இதோ:-

  • இந்தியவின் விலை உயர்ந்த மசாலா பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • ஆரோக்கியமான கொழுப்புகளில் நிறைந்துள்ள நெய் ஆண்களின் ஒட்டுமொத்த உயிர் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • ஆண் குறியின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த பாலியல் செயல்பாட்டை திருப்தியாக மாற்ற பூண்டு முக்கிய காரணிகளாக உள்ளது.
  • புரதம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ள பாதாம் பருப்பில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.
  • இந்திய மூலிகைகளில் ஒன்றான அஸ்வகந்தா, ஆண்களின் ஒட்டுமொத்த உயிர் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்ததி டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆண்மை குறைவு பிரச்னை வராமல் தடுக்கும் முறைகள்:- 

  • ஆண்மை குறைவு குறித்த பிரச்னைகளுக்கு முறையாக தண்ணீரை குடிக்காதது முக்கிய பிரச்னையாக உள்ளது. தண்ணீர் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் உதவுகிறது.
  • தூக்கம் உங்கள் உடல் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது, இது ஆண்மைக்கு முக்கியமானது என்பதால் தினமும் போதுமான நேரம் தூங்குங்கள். 
  • மன அழுத்தம் ஆண்மையை பாதிக்கலாம். யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.
  • புகைபிடித்தல் விந்தணுக்களை சேதப்படுத்தும். அதிகப்படியான மது அருந்துதல் ஆண்மையை பாதிக்கும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது. 

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.