Hemoglobin : ஹீமோகுளோபினை அதிகரிக்க; நீண்ட ஆயுளும், இளமையும் துள்ள வேண்டுமா? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hemoglobin : ஹீமோகுளோபினை அதிகரிக்க; நீண்ட ஆயுளும், இளமையும் துள்ள வேண்டுமா? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்க!

Hemoglobin : ஹீமோகுளோபினை அதிகரிக்க; நீண்ட ஆயுளும், இளமையும் துள்ள வேண்டுமா? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்க!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2025 03:06 PM IST

ஹீமோகுளோபினை அதிகரிக்கவும், நீண்ட ஆயுளும் கிடைக்க இந்த பானங்கள் போதும்.

ஹீமோகுளோபினை அதிகரிக்க; நீண்ட ஆயுளும், இளமையும் துள்ள வேண்டுமா? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்க!
ஹீமோகுளோபினை அதிகரிக்க; நீண்ட ஆயுளும், இளமையும் துள்ள வேண்டுமா? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்க!

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 2

மாதுளை பழம் – 1

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

நெல்லிக்காயின் விதைகளை நீக்கிவிட்டு அதை சிறிய துண்டுகளாக நறுகிக்கொள்ள வேண்டும். அடுத்து மாதுளை முத்துக்களை எடுத்து, இரண்டையும் மிக்ஸி ஜாரில் அடித்து சாறு பிழிந்துகொள்ளவேண்டும். அதை வடிகட்டி தேன் கலந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து பருகி வந்தால், அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். இளமை தோற்றமும் எப்போதும் இருக்கும்.

மேலும் நெல்லிக்காயை கர்ப்ப மருந்து என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. நெல்லிக்காயின் தாவரவியல் பெயர் எம்பிலிக்கா ஃபைலான்தஸ் என்பது ஆகும். அதற்கு நரை, திரை, மூப்பு, பிணி மற்றும் மரணம் என்ற இவற்றை தள்ளிப்போடக்கூடிய ஆற்றல் கொண்ட அருமருந்து என்று பொருள். காயம் என்ற உடலை கர்ப்பமாகப் பாதுகாக்கக்கூடியது நெல்லிக்காய்.

கர்ப்பம் என்றால் நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஆகியவைதான் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றை தாமத்தப்படுத்தும் அருமருந்தாக நெல்லிக்காய் உள்ளது. அதனால்தான் அதியமான் மன்னன் அவ்வைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார். அவ்வையார் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இளமையுடன் இருந்து எவ்வித நோய் நொடியும் இன்றி சமூகத்தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகத்தான் என்று சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.

இதிலே சில பொருட்களை சேர்த்து அதிகரித்துக்கொண்டால் அது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

மாதுளை பழம் – 1

கேரட் – 1

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

பீட்ரூட் - 1

நெல்லிக்காய் – 1

தேன் – தேவைப்பட்டால் தேவையான அளவு

செய்முறை

நறுக்கிய கேரட், பீட்ரூட், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல் மற்றும் மாதுளை முத்துக்கள் இவையனைத்தையும் நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும். அதை வடிகட்டி அதில் தேன் கலந்து தினமும் காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டாக இதை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் செய்யும்போது, உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு இயற்கையான முறையில் அதிகரிப்பதை காண முடியும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.