தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Increase Happy Hormones : உங்கள் உடலில் தினமும் மகிழ்ச்சி ஹார்மோன்களை உயர்த்தும் வழிகள் என்ன தெரியுமா?

Increase Happy Hormones : உங்கள் உடலில் தினமும் மகிழ்ச்சி ஹார்மோன்களை உயர்த்தும் வழிகள் என்ன தெரியுமா?

Jun 19, 2024 06:00 AM IST Priyadarshini R
Jun 19, 2024 06:00 AM , IST

  • Increase Happy Hormones : உங்கள் உடலில் தினமும் மகிழ்ச்சி ஹார்மோன்களை உயர்த்தும் வழிகள் என்ன தெரியுமா?

நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் தினசரி நடவடிக்கைகள் - நாம் பெரிய விஷயங்களுக்காக மட்டும்தான் மகிழ்ச்சி கொள்ளவேண்டும் என்ற தேவையில்லை. சிறிய விஷயங்கள் கூட நமக்கு மகிழ்ச்சி தருபவையாக இருக்கலாம். தினசரி நாம் சில பழக்கவழக்கங்களை கடைபிடித்தால், அவை நமது மனநிலையில் மகிழ்ச்சி பொங்கச் செய்பவையாகக் கூட இருக்கலாம். நமது உடல் இயற்கையில் சில மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கும். அவை செரோட்டினின், டோப்பமைன், ஆக்ஸிடாசின் மற்றும் எண்டோர்பின்கள் ஆகும். இவை நமது உணர்வுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. 

(1 / 10)

உங்கள் நாளை நன்றியுடன் துவங்குங்கள் - உங்கள் நாளை நீங்கள் நன்றியுடன் துவங்கவேண்டும். அது உங்களுக்கு நாள் முழுவதும் நேர்மறை மனநிலையைத்தரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தினமும் காலையில் சில மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதற்கு நன்றியுடன் இருக்கவேண்டுமோ அதற்கு நன்றி கூறிக்கொண்டிருங்கள். இந்த சிறிய செயல் உங்கள் உடலில் டோப்பமைன் அளவை அதிகரிக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் தரும் ஒரு ஹார்மோன் ஆகும். 

(2 / 10)

காலையில் நடைப்பயிற்சி - உடற்பயிற்சி உங்கள் மனநிலையை மாற்றும் மருந்து என்றே கூறலாம். நீங்கள் ஏதேனும் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, உங்கள் உடல் எண்டோர்ஃபில்களை வெளியிடுகிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் ஆகும். குறிப்பாக, சிறிது நேர சிறிய நடை கூட உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இது உங்கள் உடலுக்கு தேவையான எண்டோஃபில்களை வழங்கி, உங்களை பயிற்சி முடித்த சில மணி நேரங்களுக்குப்பின்னரும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும். 

(3 / 10)

காலைநேர சூரிய ஒளியில் குளியுங்கள் - காலை நேரத்தில் இயற்கை வெளிச்சத்தில் சிறிது நேரம் இருங்கள். அது உங்கள் உடல் செரோட்டினின் உற்பத்தியை முறைப்படுத்த உதவும். உங்கள் உடல் செரோட்டினினை சுரக்கும். செரோட்டினின் உங்கள் நல்வாழ்வுக்கும், மகிழ்ச்சிக்கும் உதவக்கூடிய ஒரு ஹார்மோன் ஆகும். எனவே தினமும் 15 நிமிடங்கள் வெயிலில் குளிக்க முயற்சி செய்யுங்கள். அது உங்கள் மனநிலையை மாற்றும்.

(4 / 10)

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அல்லது தியானம் - ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அல்லது தியானம் உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழிகள். இது உங்களுக்கு மனஅமைதியைத் தரும். எனவே தினமும், சில மணித்துளிகள் நீங்கள் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியை செய்யுங்கள். அது உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதை உறுதிப்படுத்தும்.

(5 / 10)

உங்கள் உணவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவை சேருங்கள் - ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அவை கொழுப்பு நிறைந்த மீன்கள், ஃப்ளாக்ஸ் விதைகள், வால்நட்கள் ஆகியவை ஆகும். இது உங்கள் மூளை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. உங்களின் மனநிலையை மாற்றும் தன்மைகொண்டது. எனவே உங்கள் உணவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகளை சேர்த்துக்கொள்வது உங்கள் மனஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் சிறந்தது.

(6 / 10)

சத்தமாக சிரியுங்கள் - சிரிப்பது சிறந்த மருந்து. நீங்கள் சிரிக்கும்போது, உங்கள் மூளை டோப்பமைன்கள் மற்றும் எண்டோர்பிஃபின்களைச் சுரக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சி உணர்வைத்தரும். உங்களுக்கும், உங்கள் நல்வாழ்வுக்கும் சிரிப்பது நல்லது. உங்களை சிரிக்கவைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். அது நீங்கள் ஒரு வீடியோ பார்ப்பதாக இருக்கலாம் அல்லது காமெடி ஷோ பார்ப்பதாக இருக்கலாம். நண்பர்களுடன் நேரம் செலவிடுவதாக இருக்கலாம். எனவே சிரிக்க நேரம் கொடுங்கள். 

(7 / 10)

அன்பு செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் - மற்றவர்களிடம் அன்பு செலுத்தினால், அது உங்கள்னி ஆக்ஸிடாசின் அளவை அதிகரிக்கச் செய்யும். ஆக்ஸிடாசின் காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படும். இது பிணைப்பை ஏற்படுத்தவும், உணர்வு ரீதியாக உங்களுக்கு இதத்தை தருவதற்கும் உதவும் ஹார்மோன் ஆகும்.

(8 / 10)

உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள் - இசைக்கு உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தும் மற்றும் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் தன்மை உள்ளது. இது உங்கள் மகிழ்ச்சி ஹார்மோன்களை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தும் தன்மைகொண்டது. எனவே உங்களுக்கு பிடித்த பாடல்கள் அடங்கிய ப்ளே லிஸ்டை உருவாக்குங்கள். அது உங்களின் மகிழ்ச்சியை நாள் முழுவதும் உயர்த்தும் தன்மைகொண்டது. எனவே தினமும் உங்களுக்கு பிடித்த இசையை கட்டாயம் கேளுங்கள்.

(9 / 10)

நல்ல இரவு உறக்கம் - தரமான உறக்கம் உங்களின் மகிழ்ச்சி ஹார்மோன்களை முறைப்படுத்த மிகவும் தேவையாகும். செரோட்டினின் மற்றும் டோப்பமைன் ஆகியவை சுரக்க உறக்கம் அவசியம். எனவே உங்களுக்கான சரியான படுக்கை பழக்கத்தை உருவாக்குங்கள். 7 முதல் 9 மணி நேர உறக்கம் என்பது உங்களுக்கு அன்றாடம் கட்டாயம் தேவைப்படுவதாகும். எனவே தினமும் அதை உறுதிப்படுத்தி, மனஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்