Increase Brain Power : உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக்கும் சக்திவாய்ந்த பழக்கங்கள் இவைதான்!
Increase Brain Power : உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக்கும் சக்திவாய்ந்த பழக்கங்கள் இவைதான்!

Increase Brain Power : அறிவான மூளை
நமது மூளையை அவ்வப்போது வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு நீங்கள் அன்றாடம் செய்யும் எளிய சில வழிமுறைகளே போதுமானது. இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி, நினைவாற்றலை அதிகரிக்கும். உங்களின் கவனம் மற்றும் ஒட்டுமொத்த நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உடற்பயிற்சி
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அது உங்கள் உடலில் புதிய நியூரான்கள் வளர்வதற்கு உதவும். மூளையின் திறனை அதிகரிக்கும். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகளை முறையாக செய்தால், அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்க முடியும். வயோதிகர்களில் இது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளைக்கு ஊட்டமளிக்கும் உணவுகள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவை உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன. மூளை நோய்கள் வராமல் தடுக்கின்றன.
பச்சை காய்கறிகள், பெரிகள், ஃபேட்டி ஃபிஷ், நட்ஸ் ஆகியவை மூளையை சுறுசுறுப்பாக்கும் திறன்கொண்ட உணவுகள் பட்டியலில் உள்ளது. இவை நினைவாற்றல் இழப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே உங்கள் குழந்தைகளின் உணவுகளில் இவை அதிகம் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
உறக்கம்
உறங்கும்போது, மூளை தகவல்களை சேகரித்து, நினைவுகளை பட்டியலிடுகிறது. மற்றும் மூளையில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. தூக்கம் குறையும்போது, நினைவாற்றல் திறன் குறைகிறது. இதனால் நினைவிழக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொரு இரவும் நீங்கள் போதிய அளவு உறங்குவதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்களின் மூளை நன்றாக இயங்கும்.
தியானம்
தியானம் பழகுவது, மூளையில் கற்றல், நினைவாற்றல் உணர்வு மேலாண்மை ஆகியவற்றை முறைப்படுத்த உதவுகிறது. 8 வாரம் தொடர்ந்து மனதை வளர்க்கும் தியானப்பயிற்சி செய்வது, மூளையின் இயக்கம் மற்றும் அமைப்பை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் உங்களுக்கு, நல்ல நினைவாற்றல் மற்றும் மனத்தெளிவு பிறக்கும்.
நண்பர்கள் உதவலாம்
உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, அவர்களுடன் சேர்ந்து குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்வது, நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்வது என அனைத்தும் உங்களின் நினைவாற்றல் திறனை வளர்க்கும். நினைவிழப்பை தடுக்கும். டிமென்ஷியா ஏற்படும் ஆபத்தை சமூகத்துடன் தொடர்பில் இருப்பது கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
நமது மூளை சவால்களை விரும்புகிறது
பசில்கள், வாசிப்பு, இசைக்கருவிகள் இசைப்பது அல்லது புதிய மொழியை கற்பது ஆகியவற்றை செய்யும்போது, உங்கள் மூளையின் இயக்கம் தூண்டப்படும். இது நரம்பியல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இதுபோல் மூளையை தூண்டும் நடவடிக்கைகள், செய்யும்போது அது டிமென்ஷியா போன்ற வியாதிகள் ஏற்படுவது குறையும்.
இசைக்கருவியை இசையுங்கள்
இசைக்கருவிகளை இசைக்க கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் மூளையின் பல்வேறு பகுதிகளிலும் சென்று வேலை செய்கிறது. நினைவாற்றல், காது கேட்கும் திறன், குழந்தைகளின் மோட்டார் திறன்கள் ஆகியவை வளர்கிறது. இசையும், நரம்பு மண்டலமும் மிகுந்த தொடர்புடையது. நினைவாற்றல் இயக்கத்துக்கு இசை மிகவும் முக்கியமானது.
கையெழுத்து பயிற்சி
இந்த காலத்தில் கையெழுத்து, அதிகம் எழுதுவதில்லை. கைகளால் எழுதாமல் டைப்பிங் செய்வதே அதிகமாக உள்ளது. கைகளில் எழுதுவது உங்கள் மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் நினைவாற்றல் திறன் மற்றும் மோட்டார் திறனை அதிகரிக்க உதவுகிறது. கைகளால் எழுதுவது உங்கள் மூளையின் பல்வேறு திறன்களுடன் தொடர்புடையது. இது உங்கள் சிந்தனை வளம், மொழித்திறன், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும்
குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களின் நரம்புகள் அனைத்தையும் தூண்டுகிறது. இது உங்களின் மனநிலையை அதிகரிக்கிறது. பதற்றத்தை குறைக்கிறது மற்றம் மூளைத்திறனை அதிகரிக்கிறது. குளிர்ந்த நீரில் நீங்கள் குளிக்கும்போது, அது உங்களின் நோராடிரெனைலைன் என்ற நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்கள் உங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் ஆகும்.
நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்கள், மனஅழுத்தத்தை குறைப்பதுடன் தொடர்புடையது. இது உங்களின் மன ஆரோக்கியத்துக்கு நல்லது. இது உங்களின் வாழ்நாளை அதிகரிக்கிறது. உங்கள் வாழ்வில் மீது நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்கள், தங்களின் நினைவாற்றல் இழக்கும் நிலையை வளர்த்துக்கொள்கிறார்கள்.

டாபிக்ஸ்