Pears Health Benefits: வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்கும் சுவை மிகுந்த பழம்..! பேரிக்காயில் இருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்
Pears Health Benefits: வெள்ளை ரத்த அணுக்கள் உருவாக்கும் அற்புத பழமாக பேரிக்காய் இருந்து வருகிறது. பார்ப்பதற்கு மணி போல் இருக்கும் பேரிக்காய் எடை குறைப்பு,இதய நோய் தடுப்பு, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு, சருமம் மற்றும் குடல் ஆரோக்கியம் என சுவை மிகுந்த இந்த பேரிக்காயில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.
சுவையும், ஊட்டச்சத்தும் மிகுந்த பழ வகைகளில் ஒன்றாக பேரிக்காய் இருந்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக பேரிக்காய் உள்ளது. பேரிக்காயில் இருக்கும் சத்துக்களின் அளவு, அவற்றை டயட்டில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
பேரிக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துகளின் அளவு
பெல் (மணி) போன்ற வடிவத்தில் இருக்கும் பழமான பேரிக்காய் சீனா, ஐரோப்பா, அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டுள்ளது. சுவை மிக்க இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள் பின்வருமாறு
கலோரிகள்: 101
புரதம்: 0.36 கிராம் (கிராம்)
கார்போஹைட்ரேட்டுகள்: 15.2 கிராம்
நார்ச்சத்து: 3.1 கிராம்
பொட்டாசியம்: 116 மி.கி
கால்சியம்: 9 மி.கி
வைட்டமின் சி: 4.3 மி.கி
ஃபோலேட் அல்லது வைட்டமின் B9: 7 μg (மைக்ரோகிராம்)
பேரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
அழற்சி என்பது நோய்த்தொற்றுகள், நச்சுகள் மற்றும் பிற நோய்க்கிருமிகளைத் தடுக்க உதவும் இயற்கையான நோயெதிர்ப்பு மறுமொழியாக உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நல்லது என்றாலும், அதிக அளவு ஆஸ்துமா, புற்றுநோய், டைப் 2 நீரிழிவு மற்றும் அல்சைமர் நோய் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. இதில் ஃபிளாவனாய்டு என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்கவும், நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
ரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல்
குறைவான கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட பேரிக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. வாரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பேரிக்காய் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 டயபிடிஸ் வருவதற்கான ஆபத்து 23 சதவீதம் குறைவாக உள்ளது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
குடல் ஆரோக்கியம்
இதில் இருக்கும் நார்ச்சத்து உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. பேரிக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், மலத்தை பெருக்கவும் உதவுகிறது. அந்த வகையில் செரிமான ஆரோக்கியத்துக்கும் இது மிகவும் நல்லது.உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், இந்த பழம் உதவும்! பேரிக்காயில் உள்ள ப்ரீபயாடிக்ஸ் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய நோய் அபாயத்தை குறைத்தல்
அதிக நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளடக்கம் இருப்பதால் பேரிக்காய் இதயத்துக்கு சிறந்தது. கரோனரி தமனி நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் அந்தோசயினின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் பேரிக்காயில் இருக்கின்றன.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. அதிக கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்து காரணியாக உள்ளது. அத்துடன் பேரிக்காயில் பொட்டாசியம் சத்தும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடை குறைப்பு
உடல் எடையைக் குறைக்கும் உணவில் சேர்க்கூடிய பழ வகைகளில் ஒன்றாக பேரிக்காய் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும், தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய முழுமையான உணர்வில் வைத்து, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது
ரத்த அழுத்தத்தை சீராக்குதல்
உயர் ரத்த அழுத்தம் உங்கள் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். அத்துடன் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்களில் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பேரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தைக் குறையும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பேரிக்காய்களில் இருக்கும் பொட்டாசியம் சத்து ரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம்
உங்கள் தோல் தடையை வலுப்படுத்தவும், தோல் பிரச்னைகளை எதிர்த்து போராடவும் ஒரு வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பேரிக்காய் சிறந்த தேர்வாக இருக்கும். பேரிக்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல வைட்டமின்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதன் மூலம், தோல் பழுதுபார்ப்பை செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
பேரிக்காயில் வைட்டமின்கள், தாமிரம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை அனைத்தும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இதில் உள்ள வைட்டமின் சி வெள்ளை ரத்த அணுக்களின் உருவாக்கத்தைத் தூண்ட உதவுகிறது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்