தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  In Relationship Stress Check Out 10 Ways To Rescue And Revive Your Bond

Relationship Stress: ரிலேஷன்ஷிப்பில் உண்டான மன அழுத்தத்தைச் சரிசெய்து, பிணைப்பை அதிகரிக்கும் வழிகள்!

Marimuthu M HT Tamil
Feb 05, 2024 08:02 PM IST

ரிலேஷன்ஷிப்பில் உண்டான மன அழுத்தத்தைச் சரிசெய்து, உங்கள் பிணைப்பை மீட்பதற்குண்டான வழிகள் குறித்துக் காண்போம்.

ரிலேஷன்ஷிப்பில் உண்டான மன அழுத்தத்தைச் சரிசெய்து, பிணைப்பை அதிகரிக்கும் வழிகள்
ரிலேஷன்ஷிப்பில் உண்டான மன அழுத்தத்தைச் சரிசெய்து, பிணைப்பை அதிகரிக்கும் வழிகள் (Pexels)

ட்ரெண்டிங் செய்திகள்

உண்மையில், தம்பதிகள் ஆக்கபூர்வமான வழிகளில் வாதிடும்போது அவர்களின் தகவல்தொடர்பு திறன் உண்மையில் அதிகரிக்கக்கூடும். உங்கள் உறவில் அவ்வப்போது பதற்றத்தை அனுபவிப்பது இயல்பானது. விரும்பத்தகாத சூழ்நிலைகள் நீண்ட காலத்திற்கு தொடரும்போது, உறவில் மன அழுத்தம் நீங்காதபோது, சிக்கல்கள் ஏற்படலாம்.

அன்றாட சவால் நிறைந்த வாழ்க்கையில் வாழும் தம்பதிகள், தங்கள் உறவை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்ற சில யுக்திகளைக் கண்டறிந்து வைத்துக் கொள்வது முக்கியம். 

மன நல ஆலோசகர் கிளிண்டன் பவர் என்பவர், ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது உண்டாகும் மன அழுத்தத்தைச் சரிசெய்வதற்கான வழிகள் குறித்து பகிர்ந்துள்ள டிப்ஸ்:-

1) உங்கள் துணை செய்யும் சிறிய விஷயங்களைக் கூட பாராட்டுங்கள். இது அன்பையும் மரியாதையையும் வளர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் நட்பை பலப்படுத்துகிறது. உங்கள் ரிலேஷன்ஷிப்பினை நெருக்கமாக வைத்திருக்கிறது. குறிப்பாக, இதற்காக ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் காதலர்களோ அல்லது திருமணமான தம்பதிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கூட ஒதுக்கலாம்.

2) ஒருவருக்கொருவர் உடல்நிலை சரியில்லாத காலங்களில், பணியில் தோல்வியுற்று இருக்கும்போதோ, தொழிலில் நஷ்டம் அடைந்து இருக்கும்போதோ ஆறுதலாகப் பேசுங்கள். அரவணைப்பைக் கொடுங்கள். இது நம்பகமான பிணைப்பை உருவாக்க முயற்சி செய்யும்.

3) ஒருவருக்கொருவர் தேவைகளுக்குப் பதிலளிக்க கற்றுக்கொள்ளவேண்டும். அமைதியான நேரம் ஒதுக்கி ஒருவருக்கொருவர் தங்களது விருப்பங்களை ஆதரிப்பதை உறுதிசெய்ய வேண்டும். மனைவிக்குப் பிடித்த கணவரும், கணவரும் பிடித்த ஒன்றை மனைவியும் நிறைவேற்ற கற்றுக்கொள்ளுங்கள். இது உணர்ச்சிமிகு உறவினை வளர்க்கும். 

4) பாசமாக நடந்துகொள்வது; காதலுடன் இருப்பதன்மூலம் உங்கள் இல்லறத்துணையுடன் வழக்கமான உடல் மற்றும் மனரீதியிலான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். பாலியல் தொடர்புகள் மட்டுமல்ல, கைகளைப் பிடிப்பது அல்லது ஆரத்தழுவி கட்டிப்பிடிப்பது போன்ற எளிய செயல்கள்கூட இதில் அடங்கும்.

5)  ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது, குடும்பத்தில் வரும் சிக்கல்களை ஒன்றாகச் சமாளிப்பது மற்றும் எந்தவொரு வருத்தங்களையும் விரைவாக நிவர்த்திசெய்வதன் மூலம் இல்லறத்துணைக்கு இடையிலான மோதலை நிர்வகிக்கலாம். திறந்த மனதுடன் பகிரங்கமாக குற்றம்சாட்டாமல் இருப்பது, கருத்து வேறுபாடுகளின்போது கூட ஆரோக்கியமான, ஒத்துழைப்பு அணுகுமுறையைப் பராமரிப்பது, தேவைப்பட்டால் இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாகப் பேசி சில மணிநேரம் பேசாமல் இருந்துகொள்வது கூட உறவினைப் பலப்படுத்தும்.

6)  சமூகத்தில் நாம் யார் என்னும் சுய மதிப்பீடு செய்துகொள்வது, வாழ்க்கையில் இருவருக்கான இலக்குகள் குறித்து கலந்துரையாடுவது மற்றும் எதிர்கால பார்வை ஆகியவற்றை ஒன்றாக சேர்ந்து பேசிக்கொள்வது முக்கியமானது. ஏனெனில், பொதுவான குறிக்கோள்களைக் கொண்டிருப்பது உங்கள் பிணைப்பை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் மன உறுதியையும் வழங்கும். 

7) உங்கள் உறவில் இல்வாழ்க்கைத்துணையின் முன்னேற்றத்துக்கு உதவுங்கள். ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கும்போது இல்லறத்துணையின் ஆலோசனைகளையும் பெறுங்கள். இந்த பரஸ்பர பரிமாற்றம் இருவரும் வளர உதவும். ஒன்றாக செயல்படும்போது அதிக நன்மைகள் கிடைக்கும்.

8) நல்ல மற்றும் கெட்ட காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து அனுசரணையாக இருங்கள். நல்லவசதியுடன் இருக்கும்போது மட்டுமல்ல, வாழ்வின் போராட்டங்களில், வறுமையில் ஒன்றாக இருங்கள்.

9) குடும்ப மற்றும் பணியிட மன அழுத்தத்தை இருவரும் ஒன்றாக சேர்ந்து சமாளிப்பது முக்கியம். தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் முன்னோடியாக இருங்கள்.

10) நான் சொன்னதுதான் சரி என நினைக்காதீர்கள். நமக்குப் பிடிக்காத ஒரு கருத்தை இல்லறத்துணை சொன்னாலும் அதில் இருக்கும் கருத்தை எடுத்து, உங்கள் கருத்தினை மாற்றி தகவமைத்துக்கொள்ளுங்கள். நெகிழ்வுத்தன்மை வாழ்வில் மிக முக்கியம். அது உறவினைப் பலப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால் விட்டுக்கொடுத்துப்போவதில் தான் அன்பு மிகுதியாகும். நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என வீம்பு பிடித்தால் வெறுப்பு தான். மேலும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்னைகளை வீட்டில் கூட ஷேர் செய்யாதீர்கள். அது தூண்டப்பட்டு வீட்டில் விஸ்வரூப பிரச்னைகள் உருவாகலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்