Immunity Booster Food: சீனிக்கிழங்கு முதல் மிளகு வரை..! இந்த குளிர் காலத்தில் உடலை கதகதப்பாக வைக்கும் உணவுகள் லிஸ்ட்
குளிர்காலத்தில் நோய் தொற்று பரவல் காரணமாக உடல் பாதிப்புகள் ஏற்படலாம். இதை தவிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டு துணி அலமாரியில் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப துணிகளை மாற்றி வைப்பீர்களோ அதுபோல்தான் உணவுமுறையிலும் இந்த குளிர்காலத்துக்கு ஏற்ப மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இந்த குளிரச்சியான சூழ்நிலையில் உடலை இயற்கையாகவே வெப்பத்தன்மையுடன் வைப்பதற்கு தகுந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குளிர் காரணமாக உங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள உடல் சற்று அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு உடலை வறுத்தாமல், இயற்கையாகவே வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடுவது நலம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த உணவுகள் சாப்பிடுவதனால் சளி தொல்லை, குளிர்காலத்தில் நிகழும் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
கொட்டைகள் மற்றும் விதைகள்
குளிர்காலத்தில் அதிகமாக உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள் சாப்பிடும் பழக்கம் இந்திய வீடுகளில் காலம்காலமாக பின்பற்றப்பட்ட வருகிறது. பாதாம், வால்நட், கடலைப்பருப்பு போன்றவிற்றில் வைட்டமின் ஈ, சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை உங்கள் உடலை கதகதப்பாக வைத்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வேர் உள்ள காய்கறிகள்
குளிர்காலத்தில் அதிகம் விளையும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டல் சீராகிறது. சீனிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, கேரட், பீட்ரூட் போன்ற வேர்கள் நிறைந்த காய்கறிகள் உடலை சுடாக வைக்க உதவுகிறது. இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி, மற்றும் இரும்பு, பொட்டாசியம் உள்பட பல்வேறு தாதூக்கள் நாள்பட்ட நோய்க்கு எதிராக செயல்படுகிறது. உடலிலுள்ள கழிவுகளை நீக்கி, வயது மூப்பை குறைக்கிறது.
மசாலா பொருள்கள்
குளிர்காலத்தில் அதிகம் கிடைக்ககூடிய மசாலா பொருள்களான ஏலக்காய், இலவங்கப்பட்டை, பே இலைகள், மிளகு, கிராம்பு, இஞ்சி ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இவை சீரான செரிமானத்துக்கு உதவுதோடு, தொண்டை கரகரப்பு தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதேபோல் குளிர்காலத்தில் ஏற்படும் குறிப்பிட்ட சில தொற்றுகளின் பாதிப்பை குறைக்கிறது.
மஞ்சள்
காபி, டீ போன்ற பானங்களுக்கு சிறந்த மாற்றாக மஞ்சள் கலந்து பொன்னிறமான பால் பருகலாம். மஞ்சளில் கர்கமின் என்ற கலவையில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைத்தான் ஊட்டச்சத்துகளின் பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் நிற பாலில், கொஞ்சம் மிளகு கலந்து சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் வரலாம்.
வெல்லம்
வெல்லம் செரிமான நெதிகளை நன்கு தூண்டுகிறது. இதனால் செரிமானம் சீராக இருப்பதுடன், அமிலத்தன்மை குறைக்கப்பட்டு, வயிறுஉப்புசம் ஆவது, வாயுதொல்லை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதிலுள்ள லேசான அளவிலான மலமிளக்கி விளைவு, மலச்சிக்கலை தீர்க்கிறது. வெல்லத்தை சாப்பிடுவதனால் இருமல், சளி, காய்ச்சல் போன்று குளிர் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக போராடுகிறது.
இஞ்சி மற்றும் பூண்டு
நீங்கள் தயார் செய்யும் குழம்புகள், கூட்டு போன்றவற்றில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். உடல் அழற்சிக்கு எதிராக இவை செயல்படுகிறது. அத்துடன் ஆண்டிசெப்டிக், வாயுக்களுக்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன. இஞ்சி, செரிமானத்தை சீராக்கும் பணியை செய்வதால் வயிற்றில் ஏற்படும் தொல்லைகள் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள அலிசின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதேபோல் நாள்தோறும் பூண்டு சாப்பிடுவதால் சளி, இருமல், காய்ச்சல் உள்பட இதர தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது.
நெய்
நெய்யில் இயல்பாகவே கதகதப்பு தன்மை உள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. சிஎல்ஏ என்கிற இணைந்த லினோலிக் அமிலம் உள்ளதால் கொலஸ்ட்ராலை கரைப்பதோடு, எடை குறைப்புக்கு உதவுகிறது. உங்களது அன்றாட உணவில் ஒரு டிஸ்பூன் நெய் சேர்ப்பதன் மூலம் இதன் பலனை முழுமையாக பெறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்