இளநீர் அல்வா : அல்வானாலே கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை! ஈசியா செய்யலாம் இளநீர் அல்வா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இளநீர் அல்வா : அல்வானாலே கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை! ஈசியா செய்யலாம் இளநீர் அல்வா!

இளநீர் அல்வா : அல்வானாலே கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை! ஈசியா செய்யலாம் இளநீர் அல்வா!

Priyadarshini R HT Tamil
Updated Jun 08, 2025 08:39 AM IST

இளநீர் அல்வா : அல்வானாலே கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இளநீர் அல்வாவை எளிதாக செய்து முடித்துவிடலாம்.

இளநீர் அல்வா : அல்வானாலே கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை! ஈசியா செய்யலாம் இளநீர் அல்வா!
இளநீர் அல்வா : அல்வானாலே கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை! ஈசியா செய்யலாம் இளநீர் அல்வா!

தேவையான பொருட்கள்

• கார்ன் ஃப்ளார் – அரை டம்ளர்

(அரை டம்ளர் கார்ன் ஃப்ளாரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக்கொள்ளவேண்டும்)

• சர்க்கரை – 2 கப்

• நெய் – 6 டேபிள் ஸ்பூன்

• ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

• குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

• முந்திரி – ஒரு கைப்பிடியளவு

• இளநீர் வழுக்கை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

1. ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைய விடவேண்டும். சர்க்கரை கரைந்தால் போதும். பாகுபதம் தேவையில்லை. பாகுபதம் இல்லாமல் சர்க்கரை கரைந்து வரும்போது, அதில் கரைத்த கார்ன் ஃப்ளார் மாவை சேர்த்து கிளறவேண்டும்.

2. அது கெட்டியாகி வரும்போது, 2 ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து ஏலக்காய்ப் பொடி, குங்குமப்பூ சேர்த்து கிளறவேண்டும்.

3. ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் இளநீர் வழுக்கை சேர்த்து வறுத்து, அல்வாவுடன் சேர்த்து கிளறவேண்டும்.

4. எஞ்சிய 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவேண்டும். கிளறிக்கொண்டே இருந்தால் நெய் இளகி கெட்டியாகி வரும். சூப்பர் சுவையான இளநீர் அல்வா தயார்.

இந்த அல்வாவை நீங்கள் ஒரு 10 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். இது சூப்பர் சுவையானதாக இருக்கும். குழந்தைகளுக்கு திடீர் ஸ்னாக்ஸாக செய்துகொடுக்கலாம். பெரியவர்களுக்கும் பிடிக்கும். உங்கள் வீட்டு விசேஷங்களில் பரிமாறவும் ஏற்றது. ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானது இந்த அல்வா.