காலிஃபிளவர் உள்பட இந்த காய்கறிகளில் பூச்சிகள், நாடாபுழுக்கள் இருந்தால்.. சமைப்பதற்கு முன் செய்ய வேண்டியவை இதோ
காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் சுகாதாரமற்ற நிலையில் வளர்க்கப்பட்டால், அவை நாடாப்புழுக்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும், வேற சில காய்கறிகளிலும் பூச்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை நன்றாக சுத்தம் பண்ண வேண்டும்.

காய்கறிகள் நம் உணவில் ரொம்ப முக்கியமான பகுதி. இது சுவையாக இருக்கும், நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைஞ்சிருக்கும். நம்ம தினசரி உணவு தேவைகளில் பெரும்பகுதி காய்கறிகளால்தான் பூர்த்தி ஆகிறது. ஆனால், சில சமயம் இந்த காய்கறிகள் உங்க ஆரோக்கியத்துக்கு பெரிய ஆபத்தா மாறலாம் எனவும் கருதப்படுகிறது. முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மாதிரியானவற்றில் பூச்சிகள் அதிகமா இருக்க வாய்ப்பு உள்ளது. இது மூளைக்கு ரொம்ப ஆபத்தானதுன்னு நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. உண்மையிலேயே, இது சின்ன பூச்சிகளா இருக்கலாம், ஆனாஸ் அது உடம்புக்கு போச்சுன்னா, நம்ம ரத்தம் வழியாக மூளைக்கு போகும் என கூறப்படுகிறது. இது முட்டைக்கோஸில் மட்டும் இல்ல, வேற நிறைய காய்கறிகளிலும் இருக்கு. இந்த காய்கறிகளை சாப்பிடணும்னா சமைப்பதற்கு முன்பு, நன்றாக கழுவி சுத்தம் பண்ணிட்டு சாப்பிடுங்க. அதனால முன்னெச்சரிக்கையாக இந்த ஆபத்தான பூச்சிகள் எந்த காய்கறிகளில் இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க.
கத்தரிக்காய்
கத்தரிக்காய் சாப்பிடுறவங்க எண்ணிக்கை அதிகம். இது வருஷம் முழுக்க கிடைக்கும். இத வச்சு செய்யற சாப்பாடு ரொம்ப பேருக்கு பிடிக்கும். கத்தரிக்காயை சமைக்கிறதுக்கு முன்னாடி, நல்லா கழுவிட்டுதான் சமைக்கணும். ஏன்னா, கத்தரிக்காயில இந்த ஆபத்தான பூச்சிகளும் இருக்கலாம். பொதுவா, இந்த டேப் வார்ம் (Tapeworms) பூச்சிகள் கத்தரிக்காய் விதைகளில் இருக்கும். இது உங்க ரத்தத்துல போய் மூளையை நேரடியா பாதிக்கும் என கூறப்படுகிறது. அதனால, கத்தரிக்காயை நறுக்கி பூச்சிகளை எடுத்துட்டு, நல்லா வேக வச்சுட்டுதான் சாப்பிடணும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கேப்சிகம்
இந்திய, சீன உணவுகளில் கேப்சிகம் அதிகமாக பயன்படுத்துவாங்க. இது வருஷம் முழுக்க கிடைக்கிற காய்கறி. ஆனா, முட்டைக்கோஸ் மாதிரியே கேப்சிகம்லயும் ஆபத்தான பூச்சிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, டேப் வார்ம் பூச்சிகள் முட்டையிடும். இந்த முட்டைகள் கேப்சிகம் விதைகளில் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் கேப்சிகம் விதைகளை எடுத்துட்டு சாப்பிடணும். அல்லது நன்றாக கழுவி, சுத்தம் பண்ணிட்டு, சூடான தண்ணீரில் வேக வைக்கிறது நல்லது எனவும் கூறப்படுகிறது.
பாகற்காய்
மார்க்கெட்டில் பாகற்காய் அதிகமாக கிடைக்கும். இதை வீட்ல அதிகமா சமைப்பாங்க. ஆனா, இதை சமைக்கும்போது, சாப்பிடும்போதும் கொஞ்சம் கவனமாக இருக்கணுமாம். உண்மையிலேயே டேப் வார்ம்ஸ், அதோட முட்டைகள் கூட அதோட விதைகளில் இருக்க வாய்ப்பு இருக்கு என கருதப்படுகிறது. அப்படி இருந்தால், பாகற்காய் விதைகளை எடுத்துட்டுதான் சாப்பிடணும். இது கூட, பாகற்காய் அழுகிப் போயிருந்தா, அதுல பூச்சி இருந்தா, அதை உபயோகிக்கக் கூடாது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தக்காளியை எல்லாரும் அதிகமா சாப்பிடுவாங்க. இதில் குழம்பு, ரசம் போன்றவைகளை சமைப்பாங்க. இது நிறைய நன்மைகளையும் கொண்டிருக்கும். ஆனால், இதில் சின்ன பூச்சிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால தக்காளியை ஒருபோதும் பச்சையா சாப்பிடக் கூடாது. இது இல்லாம, நீங்க அதோட கறி அல்லது வேற ஏதாவது சமையல் செய்யறீங்கன்னா, அதை கழுவி நல்லா வேக வைக்க மறந்துடாதீங்க.
(குறிப்பு: ஆராய்ச்சிகள், ஆரோக்கிய இதழ்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்காக இங்கே கொடுத்து இருக்கோம். இது தகவல் மட்டும்தான். இது மருத்துவத்துக்கு அல்லது சிகிச்சைக்கு மாற்றல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் இருந்தா உடனே டாக்டர்களை அணுகுங்க)

டாபிக்ஸ்