Idly Dosa Batter : வயிறு முதல் குடல் வரை உள்ள புண்கள் குணமாகவேண்டுமா? இட்லி மாவு இப்டி மட்டும் அரைங்க போதும்!
Idly Batter : இட்லி - தோசை மாவு எப்படி அரைக்க வேண்டும் தெரியுமா?

தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கிலோ
உளுந்து – 250 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
(இந்த வெந்தயத்தை ஊறவைத்து இரண்டு நாட்கள் முளைகட்டவேண்டும். பின்னர் அதை எடுத்து முளையை நீக்க வேண்டும். அந்த வெந்தயத்தை இட்லிக்கு அரைக்க பயன்படுத்தவேண்டும்)
செய்முறை
அரிசி, உளுந்து மற்றும் முளை கட்டவைத்து அதை நீக்கிய வெந்தயம் ஆகிய மூன்றையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
4 மணி நேரம் ஊறியவுடன் அரிசியை தனியாக அரைக்க வேண்டும். உளுந்து மற்றும் வெந்தயத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
அனைத்தையும் ஒன்றாக கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும். புளிக்க வைத்து இட்லி அல்லது தோசை செய்து சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிடவேண்டும்.
வழக்கமாக சேர்க்கும் அளவைவிட வெந்தயத்தை அதிகம் சேர்க்கும்போது, இட்லி சாப்பிடுவதாலே உங்கள் உடலுக்கு வெந்தயத்தின் நன்மைகள் முற்றிலும் கிடைக்கிறது. அதற்குத்தான் அந்த ஊறவைப்பது உதவுகிறது.
வெந்தயத்தின் நன்மைகள்
வெந்தயம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. வெந்தயத்தில் ஸ்டிராய்டல் சப்போனின்கள் அதிகம் உள்ளது. அவை, வயிற்றில் கொழுப்பை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தி, மொத்த கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. அது ரத்தத்தில் ட்ரைகிளிசிரைட் அளவை குறைக்கிறது.
வெந்தயத்தில் அதிகம் காலாக்டோமன்னான் உள்ளது. அது அஜிரணக்கோளாறை குறைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வேறு எந்த வயிறு தொடர்பான பிரச்னைகளும் வராமல் இருக்க உதவுகிறது.
நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ரத்தம் உறைதலை தடுக்க உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை பருகுவது எடை குறைத்து, பராமரிப்பதில் உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆய்வுகளின்படி, வெந்தயம் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. தலையில் பொடுகு தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.
சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய தண்ணீரில் பாலிபிஃனாலிக் ஃபிளேவனாய்ட்கள் உள்ளது. அது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இருக்க உதவுகிறது.
வெந்தய தண்ணீரில் வைட்டமின் கே மற்றும் சி உள்ளது. அது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முகப்பரு, சுருக்கம், கரும்புள்ளிகள் மற்றும் கோடு ஆகியவைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
நிபுணர்களைப் பொறுத்தவரை, வெந்தயத்தில் ஃப்யூரோடானோலிக் சாப்போனின்கள் அதிகம் உள்ளது. அது டெஸ்ட்ஸ்ரோன் அதிகரிக்கவும், ஸ்பெர்ம் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது.
நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பதன் மூலம், மயக்கம், சோர்வு, காலை நேர சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அனைத்தையும் குறைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்