தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Idiyappam Paya Idiyappam Mutton Paya Breakfast Combo Delicious And Healthy Together

Idiyappam Paya : இடியாப்பம் – ஆட்டுக்கால் பாயா! காலை உணவு காம்போ! சுவையும், ஆரோக்கியமும் சேர்ந்தது!

Priyadarshini R HT Tamil
Jan 09, 2024 10:00 AM IST

Idiyappam Paya : இடியாப்பம் – ஆட்டுக்கால் பாயா! காலை உணவு காம்போ! சுவையும், ஆரோக்கியமும் சேர்ந்தது!

Idiyappam Paya : இடியாப்பம் – ஆட்டுக்கால் பாயா! காலை உணவு காம்போ! சுவையும், ஆரோக்கியமும் சேர்ந்தது!
Idiyappam Paya : இடியாப்பம் – ஆட்டுக்கால் பாயா! காலை உணவு காம்போ! சுவையும், ஆரோக்கியமும் சேர்ந்தது!

ட்ரெண்டிங் செய்திகள்

உப்பு – தேவையான அளவு

சுடு தண்ணீர்

செய்முறை -

அகல பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்துகொண்டு, அதில் கொஞ்சம், கொஞ்சமாக சுடு தண்ணீர் சேர்த்து கிளறவேண்டும். அரிசி மாவு நன்கு திரண்டு வரும் வரை தண்ணீர் சேர்க்கவேண்டும்.

அடுத்து சிறிதளவு மாவை, அச்சில் போட்டு, இடியாப்ப தட்டில் பிழிந்து, இட்லி பாத்திரத்தில் அல்லது குக்கரில் 10 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

சுவையான இடியாப்பம் தயார்.

ஆட்டு கால் பாயா

தேவையான பொருட்கள்

ஆட்டு கால் ஊறவைக்க

ஆட்டு கால் – 4

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

ஆட்டு கால் வேகவைக்க

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் - 1

வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 கீறியது

கறிவேப்பில்லை – ஒரு கொத்து

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

தனியாதூள் – அரை ஸ்பூன்

சீரக தூள் – அரை ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

மசாலா விழுது அரைக்க

சோம்பு – அரை ஸ்பூன்

கச கசா – ஒரு ஸ்பூன்

துருவிய தேங்காய் – அரை கப்

செய்முறை -

ஆட்டு கால் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்L 10 நிமிடம் வைக்க வேண்டும்.

மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில் சோம்பு, கச கசா, தேங்காய் துருவல் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவேண்டும்.

அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்க்க வேண்டும்.

வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

தக்காளி நன்றாக வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் விழுது போட்டு கலக்கவேண்டும்.

அடுத்து ஆட்டு கால் துண்டுகளை போட்டு கிளறவேண்டும்.

தேவையானால் சிறிதளவு உப்பு, மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி 15 விசில் வரும் வரை வேகவைக்கவேண்டும்.

கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவேண்டும்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

WhatsApp channel