தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Icu Patient Drug Discovery For Bacteria Attacking Icu Patients Fantastic On Research

ICU Patient : ஐசியூ நோயாளிகளிகளை தாக்கும் பாக்டீரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! -ஆராய்ச்சியில் அசத்தல்!

Priyadarshini R HT Tamil
Jan 09, 2024 11:00 AM IST

ICU Patient : ஐசியூ நோயாளிகளிகளை தாக்கும் பாக்டீரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! -ஆராய்ச்சியில் அசத்தல்!

ICU Patient : ஐசியூ நோயாளிகளிகளை தாக்கும் பாக்டீரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! -ஆராய்ச்சியில் அசத்தல்!
ICU Patient : ஐசியூ நோயாளிகளிகளை தாக்கும் பாக்டீரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! -ஆராய்ச்சியில் அசத்தல்!

ட்ரெண்டிங் செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மத்தியில் எற்படும் கிருமிக்கொல்லி எதிர்ப்புத்திறன் பெற்ற அசினெட்டோபேக்டர்பெமானி பாக்டீரியாவைக் கொல்லும் கிருமிக்கொல்லி மருந்தை ஆய்வாளர்கள் கண்டறிந்து, அது Nature ஆராய்ச்சி பத்திரிக்கையில், ஜம்போலனி மற்றும் குழுவினர், பாகில் மற்றும் குழுவினரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்த கிருமிக்கொல்லியின் பெயர் ஜோசுரபால்பின் (Zosurabalpin).

இந்த மருந்து, கிருமிக்கொல்லி மருந்திற்கு (கார்போபெனாம்) எதிர்ப்புத்தன்மை பெற்றுள்ள அசினெட்டோபேக்டர் பெமானி பாக்டீரியாவை கொல்லும் திறன் கொண்டதை சோதனைக்குழாய் பரிசோதனை, எலிகள், குறைந்த அளவில் மனிதர்கள் மத்தியில் ஆய்வுசெய்து உறுதிசெய்துள்ளனர் ஆய்வாளர்கள் ஜம்பலோனி மற்றும் குழுவினர்.

முதலில் MCP-tethered MacroCyclic Peptide எனும் கிருமிக்கொல்லி மூலக்கூறு கிருமிக்கொல்லி எதிர்ப்புத்திறன் பெற்ற அசினெட்டோபேக்டர் பெமானிக்கு எதிராக செயல்படுவது கண்டறியப்பட்டு பின்னர் MCPயில் மாற்றம் செய்து ஜோசுரபால்பின் கிருமிக்கொல்லி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த Zosurabalpin எப்படி செயல்படுகிறது என Morgan K.Gugger மற்றும் Paul J.Hergenrother(University of Illinosis)கண்டறிந்தனர்.

அசினெட்டோபேக்டர் பாக்டீரியாவைச் சுற்றி 2 சவ்வுகள் வெளிப்புறத்தில் உள்ளன. 2ல் வெளிப்புறத்தில் உள்ள சவ்விற்கு உள்ளிருந்து லைப்போ பாலிசாக்கரைட் (Lipo Polysaccharide) அனுப்பப்படுவது இம்மருந்தால் தடை செய்யப்படுகிறது. இதனால் லைப்போ பாலிசாக்கரைட் பாக்டீரியாவினுள்ளே அளவிற்கு அதிகமாகக் கூடி பாக்டீரியா கொல்லப்படுகிறது.

எனவே சோதனைக் குழாய் ஆய்வுகளிலும், எலிகள் மற்றும் சிறு அளவில் மனிதர்களிடையே மேற்கொண்ட ஆய்வுகளில் Zosurabalpin கிருமிக்கொல்லி கார்போபெனாம் கிருமிக்கொல்லிக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற அசினெட்டோபேக்டர் பெமானி பாக்டீரியா ஏற்படுத்தும் நிமோனியா மற்றும் ரத்த தொற்றுக்கு (Sepsis) எதிராக வேலை செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பாலிமிக்சின் வகை கிருமிக்கொல்லிகளை பயன்படுத்தி (அதிலுள்ள ஹைட்ராக்சில் ரேடிக்கிள் கிருமியைக் கொல்லும்) அசினெட்டோபேக்டர் தொற்றுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், அசினெட்டோபேக்டர்பெமானி பாக்டீரியா, கிருமிகொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்று வருகிறது.

தமிழகத்தில் 2019ல் செய்யப்பட்ட ஆய்வில் (சிதம்பரம் மற்றும் குழுவினர்) இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்படும் ஏறக்குறைய 11 சதவீத கிருமித்தொற்றுக்கு அசினெட்டோபேக்டர்பெமானி காரணமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கும்போது ஏற்படும் 7.9 சதவீத தொற்றுக்கும், 5.7 – 15.7 சதவீத ரத்த தொற்றுக்கும் அசினெட்டோபேக்டர் பெமானியே காரணம் என ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

இந்தக் கிருமி பஞ்சில் (Cotton) 25 நாட்களும், உலர் காகிதத்தில் (Dry Filter Paper)6 நாட்களும் உயிர்வாழும்.

Zosurabalpin கிருமிக்கொல்லி கண்டுபிடிப்பு குறித்து Global Antibiotic Research and Development Partnership அமைப்பின் இயக்குநர் Dr.லாரா பிட்டாக், மனிதர்கள் மத்தியில் இது புழக்கத்திற்கு வர சில காலம் ஆகும் என்றும், குறைந்த செலவில் அதைஉற்பத்தி செய்வதும் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கிருமிக்கொல்லி மருந்து விரைவில் புழக்கத்திற்கு வந்தால், அது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிருமிகொல்லி எதிர்ப்புத்தன்மை பெற்ற அசினெட்டோபேக்டர் பெமானி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி

WhatsApp channel

டாபிக்ஸ்