ஐஸ் பாத் : ‘ஒரு குளுகுளு குளியல் போடலாமா?’ ஐஸ் பாத் எனப்படும் ஐஸ்கட்டி குளியல் உங்கள் உடலுக்கு நன்மையைத் தருமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஐஸ் பாத் : ‘ஒரு குளுகுளு குளியல் போடலாமா?’ ஐஸ் பாத் எனப்படும் ஐஸ்கட்டி குளியல் உங்கள் உடலுக்கு நன்மையைத் தருமா?

ஐஸ் பாத் : ‘ஒரு குளுகுளு குளியல் போடலாமா?’ ஐஸ் பாத் எனப்படும் ஐஸ்கட்டி குளியல் உங்கள் உடலுக்கு நன்மையைத் தருமா?

Priyadarshini R HT Tamil
Published May 17, 2025 07:00 AM IST

ஐஸ் பாத் : அடிக்கும் வெயிலுக்கு ஐஸ் கட்டியில் குளித்தால்தான் எரிச்சல் தீரும் என்று உள்ளது. ஐஸ்கட்டி குளியலும் நன்மை தரும். அது என்னவென்று பாருங்கள்.

ஐஸ் பாத் : ‘ஒரு குளுகுளு குளியல் போடலாமா?’ ஐஸ் பாத் எனப்படும் ஐஸ்கட்டி குளியல் உங்கள் உடலுக்கு நன்மையைத் தருமா?
ஐஸ் பாத் : ‘ஒரு குளுகுளு குளியல் போடலாமா?’ ஐஸ் பாத் எனப்படும் ஐஸ்கட்டி குளியல் உங்கள் உடலுக்கு நன்மையைத் தருமா?

உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

கடும் குளிரைக் கொடுக்கும் அந்த தண்ணீர் உங்களை எதையும் விடி அதிகம் விழிப்பு கொள்ளச் செய்கிறது. இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடலுக்கு இயற்கையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது உங்களை எச்சரிக்கையுடனும், புத்துணர்வுடனும் இருக்கச் செய்கிறது. குறிப்பாக காலையில் நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.

உறக்கத்தை மேம்படுத்துகிறது

நல்ல ஒரு குளுமையான நீரில் நீங்கள் குளிக்கும்போது, அது உங்களுக்கு நன்றாக உறங்க உதவுகிறது. இது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இது உங்கள் உடலின் சூட்டைக் குறைக்கிறது. மேலும் உங்களை அமைதியாக்கி, நீங்கள் நன்றாக படுத்து உறங்கவும், இரவு முழுவதும் நல்ல உறக்கத்தைப் பெறவும் உதவுகிறது.

உடல் வலி மற்றும் தசை வலியைப் போக்குகிறது

நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் நபர் என்றால், நீங்கள் அதை செய்து முடித்த பின்னர், உடலில் வலி இருப்பதைப்போல் உணர்வீர்கள். அதை இந்த ஐஸ் பாத் போக்கும். குளிர்ந்த தண்ணீர் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் தசைகளை விரைவாக மீட்டகவும் செய்கிறது. குறைவான வலியை உணரவும் செய்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

குளிர், உங்கள் ரத்த நாளங்களை இறுக்கமாக்குகிறது. மேலும் உங்களை அமைதிப்படுத்துகிறது. அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நாளடைவில், இது உங்கள் இதயத்துக்கு நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது

அதிக குளிர் உங்களுக்கு பல்வேறு சில்லென்ற உணர்வைக் கொடுக்கிறது. இதனால், உங்கள் உடலில் ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கிறது. உங்கள் மூளையில் எண்டோர்ஃபின்கள் போன்ற ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் பதற்றத்தைப் போக்குகிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

உங்கள் உடலில் குளிர் இருக்கும்போது, அது அதிக கலோரிகளை எரித்து உங்கள் உடலுக்கு சூடு கொடுக்கிறது. இது உங்கள் உடல் வளர்சிதையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைக்கவும் நாளடைவில் உதவுகிறது.

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

ஐஸ் பாத் எடுப்பது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பான முறையில் செயல்பட உதவுகிறது. இதனால் நீங்கள் நோய்வாய்ப்படுவது குறைகிறது. மேலும் நீங்கள் சில்லென்ற தண்ணீரில் குளிக்கும்போது ஏற்படும் சிறிய ஷாக், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து அதிகரிக்கிறது.