மடமடவென உடல் எடை குறையவேண்டும்! மக்கானாவா? பொரியா? எது சரியான ஸ்னாக்ஸ்? ஊட்டச்சத்துக்கள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மடமடவென உடல் எடை குறையவேண்டும்! மக்கானாவா? பொரியா? எது சரியான ஸ்னாக்ஸ்? ஊட்டச்சத்துக்கள் என்ன?

மடமடவென உடல் எடை குறையவேண்டும்! மக்கானாவா? பொரியா? எது சரியான ஸ்னாக்ஸ்? ஊட்டச்சத்துக்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Dec 28, 2024 09:51 AM IST

பொரி அல்லது மக்கானா உடல் எடையைக் குறைக்க உதவும் ஸ்னாக்ஸ் எது?

மடமடவென உடல் எடை குறையவேண்டும்! மக்கானாவா? பொரியா? எது சரியான ஸ்னாக்ஸ்? ஊட்டச்சத்துக்கள் என்ன?
மடமடவென உடல் எடை குறையவேண்டும்! மக்கானாவா? பொரியா? எது சரியான ஸ்னாக்ஸ்? ஊட்டச்சத்துக்கள் என்ன?

மக்கானாவா? பொரியா?

நாம் உடல் எடையைக் குறைக்க கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம். ஸ்னாக்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் பெருமளவில் கருத்தில்கொள்ளமாட்டோம். ஆனால் பொதுவான நம்பிக்கைகளுக்கு மாறாக, உங்கள் உடல் எடையை முறையாக பராமரிக்கும் ஸ்னாக்ஸ்களும் உள்ளன. நாம் அதிகம் எடுத்துக்கொள்ளும் இரண்டு இந்திய ஸ்னாக்ஸ்கள் உங்கள் உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்கள் ஆகும்.

அவை மக்கானாவும், பொரியும் ஆகும். இவையிரண்டும் உடல் எடையை இழப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஸ்னாக்ஸ்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலின் வளர்சிதை அதிகரிக்கும். இதனால் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் பசியையும் போக்கிக்கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு ஊட்டமளித்து, உங்களின் உடல் எடை இலக்குகளை எட்டிப்பிடிக்கவும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஸ்னாக்ஸ்களின் ஊட்டச்சத்து அளவுகள் இவற்றை நீங்கள் உங்கள் சரிவிகித உணவில் சேர்த்துக்கொள்ள வைக்கிறது. இதனால் உங்களால் உடல் எடையை முறையாகப் பராமரிக்க முடிகிறது. ஆனால் உடல் எடையை இழக்கச் செய்வதில் எது சிறந்த ஸ்னாக்ஸ்? இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை தெரிந்துகொண்டு, எது சிறந்தது என்று பாருங்கள்.

மக்கானா

மக்கானா என்பது தாமரை விதைகள் அல்லது நரி நட்ஸ்கள் என்று அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். இதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. மிதமான அளவு புரதம் மற்றும் கலோரிகள் குறைவு.

இதில் ஃப்ளாவனாய்ட்கள், ஃபினோலிக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற மினரல்கள் உள்ளன. இதை உங்கள் சரிவிகித உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கிற.

பொரி

பொரியில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. புரதம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்தது. இதில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய மினரல்களும் உள்ளன. பொரி குளூட்டன் இல்லாதது. கலோரிகள் குறைந்தது. குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மொறுமொறுப்பான இந்த பொரியில் நல்ல கார்போஹைட்ரேட்கள் உள்ளன. அது உங்களுக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்கிறது.

மக்கானாவா? பொரியா? எது சிறந்தது?

மக்கானாவில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயிறு நிறைந்த உணர்வைத் தரும். உடலின் வளர்சிதையை அதிகரிக்கும். பொரியில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் உங்களின் செரிமானம் மற்றும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துகிறது.

இந்த இரண்டு ஸ்னாக்ஸ்களிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. உங்கள் உடல் எடையை குறைப்பதில் இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தைப் பொறுத்தது. இரண்டும் உடல் எடையை குறைக்க உதவும் ஸ்னாக்ஸ்கள் ஆகும்.

வறுத்த மக்கானாவை சாப்பிட விரும்புபவர்கள் அதில் உள்ள எண்ணெய் கலோரிகளை அதிகரிக்கச் செய்யும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். பொரி மொறுமொறுப்பாக இருக்கும் என்பதால், அதை நீங்கள் அதிகம் சாப்பிட தூண்டும்.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஸ்னாக்ஸை தேர்ந்தெடுக்கும்போது, கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்கு பிடித்த சுவை மற்றும் உடல் எடையை குறைக்க எது தேவை என்பதை பொறுத்து உங்களின் ஸ்னாக்ஸை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.