Hyperhidrosis: உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிக வியர்வை சுரப்பதால் அவதியா? – சித்த மருத்துவர் கூறும் எளிய மருந்து!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hyperhidrosis: உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிக வியர்வை சுரப்பதால் அவதியா? – சித்த மருத்துவர் கூறும் எளிய மருந்து!

Hyperhidrosis: உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிக வியர்வை சுரப்பதால் அவதியா? – சித்த மருத்துவர் கூறும் எளிய மருந்து!

Priyadarshini R HT Tamil
Feb 01, 2025 10:03 AM IST

Hyperhidrosis: உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிக வியர்வை சுரப்பதால் வரும் பிரச்னைகளுக்கான எளிய தீர்வு ஒன்ற சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.

Hyperhidrosis: உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிக வியர்வை சுரப்பதால் அவதியா? – சித்த மருத்துவர் கூறும் எளிய மருந்து!
Hyperhidrosis: உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிக வியர்வை சுரப்பதால் அவதியா? – சித்த மருத்துவர் கூறும் எளிய மருந்து!

அதில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் சுரக்கும் அதிக வியர்வை அதாவது ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியதாவது

ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்பது அதிக வியர்வை சுரக்கும் ஒரு வியாதியாகும். உடல் வெப்பநிலையை முறைப்படுத்த தேவையான அளவை விட அதிகளவு வியர்வை சுரக்கும். இதனால் கையில் வைத்திருக்கும் கர்சீப்பே நனைந்துபோகும் அளவுக்கு இருக்கும்.

அறிகுறிகள்

• சூடு அல்லது உடற்பயிற்சியால் அதிக வியர்வை சுரக்காது.

• வியர்வை உடலில் உள்ள ஆடையை நனைத்துவிடும் அளவுக்கு இருக்கும்.

• ஓய்வாக இருக்கும்போதும் அல்லது குளிர் காலத்திலும் வியர்க்கும்.

• உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறிப்பாக அக்குள், உள்ளங்கை, உள்ளங்கால்களில் அதிகம் சுரக்கும்.

காரணம்

• வியர்வையைக் கட்டுப்படுத்தும் நரம்பு அதிக சென்சிட்டிவாக இருந்தால் இந்த அதிக வியர்வை சுரப்பு ஏற்படும்.

• தேவையற்ற காரணங்களுக்காக வியர்வை சுரப்பிகள் அதிக எதிர்வினையாற்றும்.

பாதிப்பு

• ஹைப்பர்ஹிட்ரோசிஸ் சமூக பயத்தையும், கூச்சத்தையும் ஏற்படுத்தும்.

• கை குலுக்குவது மற்றும் டேட்டிங் செல்வது போன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை அது தவிர்க்கும்.

• ஒருவரின் தன்னம்பிக்கையைக் குலைக்கும்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

• ஆறு மாதத்துக்கும் மேல் இந்த வியர்வை பிரச்னை தொடர்ந்தால் நீங்கள் மருத்துவரிடம் செல்லவேண்டும்.

• உங்கள் வியர்வைப் பிரச்னைகள் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது.

• அதிகம் வியர்வை சுரப்பது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தாலும் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

இதற்கு எளிய சித்த மருந்துகள் கூட உதவும். அதை நீங்கள் எடுத்து பலன்பெறலாம். இதற்கான தீர்வுகள் உங்கள் வீட்டு ஐந்தரைப் பெட்டியிலேயே உள்ளது.

அதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, கோரோஜனை, லவங்கம், ஓமம், குங்குமப்பூ என 15 மூலப்பொருட்கள் கலந்த குங்குமப்பூ மாத்திரையை வாங்கி காலை மற்றும் இரவு இரண்டு மாத்திரைகள் சாப்பிடவேண்டும். இந்த மாத்திரைகள் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். 6 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 மாத்திரை கொடுக்கலாம். இந்த மாத்திரையை சாப்பிட்ட பின்னர் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த மாத்திரையை சாப்பிட்டால் அதிக வியர்வை பிரச்னையும் தீரும். நாள்பட்ட மலச்சிக்கல், நாள்பட்ட வயிற்றுப்புண்களும் குணமாகும். ஹைப்பர்ஹிட்ரோசிஸை விரட்டியக்கலாம்.

இவ்வாறு மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.