HT Tour Special : சாகச சுற்றுலா பிரியரா? கிளம்புங்க கர்நாடகாவின் உயர்ந்த முல்லையநகரி சிகரத்துக்கு! மலையேறி மகிழுங்கள்!
HT Tour Special : மழைக்காலத்தில் முல்லையநகரி சிகரத்தில் நீங்கள் ஏறலாம். குறிப்பாக செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதத்தில் இங்கு செல்லலாம். அதிக காற்று, பனி, மழை என வழுக்கி விழ வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கவனமான இருக்க வேண்டும்.

உயர்ந்த மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், மலைகள் சூழ்ந்த, பச்சை புல்வெளி பாதை விரித்த பசுமை நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் கொட்டிக்கிடக்கிறது. 1,600 கிலோ மீட்டர் நீள மலைத்தொடரில் அரிய வகை தாவரங்களும், அதிக விலங்கினங்களும் நிறைந்து காணப்படுகிறது. மேற்கு கடற்கரை இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா மற்றும் கோவா என மாநிலங்களை கடந்து செல்லும் நீண்ட மலைத்தொடராகும். இதில் உள்ள முக்கிய மலைச்சிகரம் முல்லையநகரி சிகரமாகும்.
இதன் உயிரியல் பன்முகதன்மைக்காக உலகளவில் முக்கியத்துவம் பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர். இந்தியாவின் 27 சதவீத பூச்செடிகள் மற்றும் உள்ளூர் விலங்கினங்களின் புகலிடமாக உள்ளது.
பூகோள ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அழிகியல் தன்மையை கொண்ட இந்த மலைத்தொடரில் மலையேற்றம் செய்வது ஒரு சுவாரஸ்மான சவால் நிறைந்ததாக உள்ளது. மலையேற்ற வீரர்களின் சொர்க்கமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் இமய மலைத்தொடர்களில் பல்வேறு இடங்கள் மலையேற்ற வீரர்களை கவரும் வகையில் இருந்தாலும், கர்நாடகாவில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள உயர்ந்த சிகரம் முல்லையநகரி, சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சந்திர தோரணா மலைப்பகுதிகளில் உள்ள இந்த சிகரம் சிக்மகளூரில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் இடமாக உள்ளது.