HT Tamil Exclusive : HMPV ஒன்றும் கொரோனா அளவுக்கு பெரிய சீன் இல்ல.. ஈசியா ஓட ஓட விரட்டலாம்.. ஹோமியோபதி மருத்துவர் தகவல்!
HT Tamil Exclusive : கொரோனா கால கட்டத்தில் அலோபதி மருத்துவம் தாண்டி பல வைத்திய முறைகளை மக்கள் தேடினார்கள். அதில் ஹோமியோபதி மருத்துவத்திலும் நல்ல பலன்கள் கிடைத்தது. புதியதாய் பேசுபொருளாகி உள்ள இந்த வைரஸ் குறித்து பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி பல விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்தார்.

HT Tamil Exclusive : கடந்த 2020 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய வார்த்தை என்பது கொரோனா.. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி மனித குலத்தை நடுக்க வைத்து மன உறுதியை உடைத்து எறிந்த வைரஸ். அந்த அலை அடங்கி அமைதியாகவே மூன்று வருடங்கள் தாண்டி விட்டது. இப்போது மீண்டும் அதே சீனாவில் இருந்து அலற வைக்கும் ஒரு சொல் HMPV.. அதாவது மனித மெட்டாநியூமோ வைரஸ். இதுவும் கிட்டத்தட்ட கொரோனாவைப் போன்றே மனிதர்களின் சுவாச மண்டலத்தில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் மக்களின் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி இருக்கிறது என்றே கூறலாம்.
கொரோனா கால கட்டத்தில் அலோபதி மருத்துவம் தாண்டி பல்வேறு வைத்திய முறைகளை மக்கள் தேடினார்கள். அதில் ஹோமியோபதி மருத்துவத்திலும் நல்ல பலன்கள் கிடைத்தது. அது போலவே புதியதாய் பேசுபொருளாகி உள்ள இந்த வைரஸ் குறித்து மதுரையை சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி அவர்களிடம் உரையாடிய போது பல்வேறு விதமான விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்தார்.
அச்சம் வேண்டாம்
இந்த HMPV வைரஸ் குறிப்பாக மனிதர்களின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ப்ளூ நோய் போலவே இதன் அறிகுறிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக மிக சிறிய குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களிடையே தான் மிகவும் எளிதாக இந்த நோயின் தொற்று அதிக அளவில் உள்ளது.