HT Explainer : மாதவிடாயின் 4 கட்டங்களும், பெண் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களும்! – விரிவான விளக்கங்கள்!
HT Explainer : உங்களின் சருமம் ஏன் திடீரென டல்லாகிறது, மாதவிடாயின்போது பிரகாசமாகிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? சருமம், உடல் மற்றும் மனதில் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமான மாதவிடாயின் 4 கட்டங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
மாதவிடாய் என்பது அனைத்து பெண்களின் உடல்களில் ஏற்படும் கட்டாயமான மாற்றமாகும். அது ஒரு பெண்ணை இனப்பெருக்கத்திற்கு தயாராக்கும் ஒரு ப்ராசஸ் ஆகும். மாதவிடாய் இனப்பெருக்க அமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது பல்வேறு சரும பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அது மாதவிடாயின் ஒவ்வொரு கட்டத்திலும், பல்வேறு சருமப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்னைகள் அனைத்தும் மாதவிடாயின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை அடிப்படையாகக்கொண்டது. எனவே அதை தெரிந்துகொண்டு நீங்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
மாதவிடாயின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களிடம் பல்வேறு உடல் மன மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே என்பதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்படுவது உங்களுக்கு நல்லது.