HT Explainer : மாங்கு மாங்கென உடற்பயிற்சியுமின்றி, உணவையும் கட்டுப்படுத்தாமல் உடல் எடை குறையுமா? அது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Explainer : மாங்கு மாங்கென உடற்பயிற்சியுமின்றி, உணவையும் கட்டுப்படுத்தாமல் உடல் எடை குறையுமா? அது எப்படி?

HT Explainer : மாங்கு மாங்கென உடற்பயிற்சியுமின்றி, உணவையும் கட்டுப்படுத்தாமல் உடல் எடை குறையுமா? அது எப்படி?

Priyadarshini R HT Tamil
May 24, 2024 05:18 PM IST

HT Explainer : உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும், எடை மேலாண்மைக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?

HT Explainer : மாங்கு மாங்கென உடற்பயிற்சியுமின்றி, உணவையும் கட்டுப்படுத்தாமல் உடல் எடை குறையுமா? அது எப்படி?
HT Explainer : மாங்கு மாங்கென உடற்பயிற்சியுமின்றி, உணவையும் கட்டுப்படுத்தாமல் உடல் எடை குறையுமா? அது எப்படி?

சில நபர்கள் எந்த ஒரு முயற்சியும் இல்லாமல், குறிப்பாக உடற்பயிற்சி செய்யாமல், உணவு கட்டுப்பாடும் இல்லாமல் உடல் எடையை எளிதாக குறைத்துவிடுவார்கள். அது மற்றவர்களால் முடியாது. அது எப்படி என்று தெரியுமா? கலோரிகளை உட்கொள்வது, கலோரிகளை வெளியேற்றுவது என்ற ஃபார்முலா அல்லாமல் உடல் எடை எப்படி குறையும். அதற்கான விடையாகத்தான் உடலின் வளர்சிதை மாற்றம் உள்ளது.

உடலின் வளர்சிதை என்பது, ஒருவரின் உடல் இயற்கை முறையில், உட்கொள்ளும் உணவின் சில பகுதிகளை ஆற்றலாக அன்றாட பணிகளுக்கான உரமாகக்கொடுத்துவிட்டு, எஞ்சியவற்றை எதிர்காலத்துக்கு சேமிப்பதாகும். உங்கள் உடலை கட்டமைப்பதில், உடலின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள பங்கை புரிந்துகொள்வது உடல் எடை மேலாண்மைக்கு உறுதுணையாக இருக்கும்.

உடல் வளர்சிதை மற்றும் எடை மேலாண்மை

உடலின் வளர்சிதை மாற்றம்தான், ஒரு உடல் உட்கொள்ளும் உணவில் எத்தனை கலோரிகளை ஆற்றலாக மாற்றுவது என்பதை தீர்மானிக்கிறது. அதை ஒவ்வொரு உடலின் செயல்பாட்டுக்கும் கொடுப்பதையும் செயல்படுத்துகிறது. அதில் ஓட்டம், வேலை, உடலின் பாகங்களை சரிசெய்வது என அனைத்தும் அடங்கும். எஞ்சிய ஆற்றல் உங்கள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

சிலருக்கு உடலின் வளர்சிதை வேகமாக நடைபெறும். அவர்களின் உடல் எளிதில் உணவை ஆற்றலாக்கிவிடும் என்பது அதற்கு பொருள். இதனால் கொஞ்சம் கொழுப்பு மட்டுமே சேரும். சிலருக்கு உடல வளர்சிதை குறைவாக இருக்கும். இதனால் அவர்களின் உடல் ஆற்றலை உடனடியாக பயன்படுத்தாது. இதனால் உடல் நிறைய கொழுப்புகளை உடலில் சேர்த்து உடல் எடை மேலாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும்.

எடை அதிகரிப்பு மற்றும் மேலாண்மை என்பது நேரடியாக உடல் வளர்சிதையுடன் தொடர்புடையது. இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. மரபணுக்கள், ஹார்மோன் சமமின்மை, பழக்கவழக்கங்கள், வாழ்வியல் தேர்வுகளான உறக்க நேரம், உடல் உழைப்பு, மனஅழுத்த மேலாண்மை ஆகியவை அந்த காரணிகள் ஆகும். இந்தியர்களின் வளர்சிதை வித்யாசமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியர்களுக்கு உடல் பருமன் என்பது பெரும்பாலும் தொப்பையாக உள்ளது.

எடை மேலாண்மை

எடை மேலாண்மை என்பது எடை பார்க்கும் இயந்திரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணை மட்டும் எட்டுவதல்ல. அதிகப்படியான எடைக்கான காரணம் என்ன என்பதை அறிந்துகொண்டு அதை முன்னிலைப்படுத்துவதில்தான், எடை குறைப்பு பயணம் ஈடுபடவேண்டும். 

உடல் எடை மேலாண்மை என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைப்பதுடன், மனஆரோக்கியத்தையும் அதிகரித்து, உங்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதாகும்.

ஒவ்வொருவரின் உடல் சிதை மாற்றமும் வெவ்வேறானது. அதற்கு மரபணுக்கள், வாழ்க்கை முறை, வயது பாதிப்பு ஆகியவை காரணமாகிறது. நமது உணவை நாம் எவ்வாறு வளர்சிதை செய்து, கொழுப்பாக சேமிக்கிறோம் என்பதை பொறுத்து அமைகிறது.

இந்த தனிப்பட்ட மாற்றங்களை ஏற்பதுதான் உடல் எடை மேலாண்மையில் மிகவும் முக்கியமானது. எனவே ஒருவரின் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கு கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை தேவை. எனவே உங்களின் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் கூகுளில் தேடாமல் சரியான நிபுணரை அணுகுவதே சிறந்தது.

இன்று அறிவு பெருகிவிட்ட காலகட்டத்தில் வாழும் நாம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல் மற்றும் அவர்களின் வளர்சிதை மாற்ற அளவுகள் என நாம் தெரிந்துகொள்கிறோம். எனவே பாரம்பரிய உடல் எடை குறைப்பு முறைகள் அனைத்தும் இப்போது உதவாது.

எனவே உலகம் முழுவதிலும் இந்தியாவிலும் நாம் உடல் எடை குறைப்பு தீர்வுகளில் பெரிய மாற்றத்தை பார்க்கிறோம். உடற்பயிற்சிக்கூட நடவடிக்கைகள் கூட, வளர்சிதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயற்சிகள் மற்றும் மருத்துவரின் அறிவுரையை எடுத்துக்கொள்வது என செல்கிறது. இதனால் 15 முதல் 20 சதவீத எடை குறைப்புகள் அறிவியல் அடிப்படையில் நடைபெறுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.