Stress: மன அழுத்தத்தை ஆக்கப்பூர்வ செயல்திறனாக மாற்றுவது எப்படி?
ஒருவரின் செயல்பாட்டுத்திறன் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான உந்து சக்தியாக மன அழுத்தத்தை மாற்றலாம். அவை எவ்வாறு என்பது குறித்து காண்போம்.
![நீங்கள் எப்படி மன அழுத்தத்தை வென்று அதை செயல்திறனுக்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்ப்போம் நீங்கள் எப்படி மன அழுத்தத்தை வென்று அதை செயல்திறனுக்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்ப்போம்](https://images.hindustantimes.com/tamil/img/2024/01/12/550x309/dancing_1705047951219_1705053218963.jpg)
இன்றைய பிஸியான வாழ்க்கையில் மன அழுத்தம் ஒரு கடினமான எதிரியாக இருக்கிறது. ஆனால் அது நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தியையும் கொண்டுள்ளது.
மன அழுத்தத்தை முறியடிப்பது என்பது அதை முற்றிலுமாகத் தவிர்ப்பதை சொல்வதல்ல. அந்த ஆற்றலை உற்பத்தித்திறனாக, தனிப்பட்ட வளர்ச்சிக்கான உந்து சக்தியாக மாற்றும் திறமையில் அடங்கியுள்ளது.
இது குறித்து மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆயுஷி சுக்லா, அளித்த பேட்டியில், “மன அழுத்தம் தோல்விக்கானதாக பார்க்காமல், அதனை வளர்ச்சிக்கான ஊக்கியாக மாற்றம் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு சவாலுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது என்று ஒருவர் நம்ப வேண்டும். மேலும் ஒவ்வொரு தடையும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும் என நம்ப வேண்டும்.
மன அழுத்தங்களுக்கு எதிர்வினையாற்றுவதை விட, சிந்தனையுடன் பதிலளிக்கும் தெளிவை அடைகிறோம். மன அழுத்தம் என்பது ஒரு சக்திவாய்ந்த சக்தி. அதனை ஏற்றுக்கொண்டு இயங்கும்போது,நாம் பல துறைகளில் சவாலுடன் முன்னேறுகிறோம்’’ என்றார்.
மும்பையைச் சார்ந்த மனநல மருத்துவர் டாக்டர் அசுதோஷ் ஷாவின் கூற்றுப்படி, '"மன அழுத்தம்" என்பது மூளை கட்டமைப்பின் பல நிலைகளில் (மூலக்கூறு, செல்லுலார், சுற்றுகள் நிலை, அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் நடத்தை) குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை வகைப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனிநபரின் மூளையும் உடலும் ஒரு மன அழுத்தத்தால் சிலவற்றை செய்ய முடியாமல் போகும் போது, அந்த நபர் "துன்பத்தை" அனுபவிக்கத் தொடங்குகிறார். இந்த செயல்முறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து சரிபார்க்கப்படாவிட்டால், பல உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தத்தை அனுபவிப்பதில் தனிப்பட்ட வித்தியாசம் ஒவ்வொருவருக்கும் இருக்கும்’’ என்கிறார்.
மன அழுத்தம் என்றால் என்ன, வெவ்வேறு நபர்களுக்கு எப்படி வெவ்வேறு மன அழுத்தம் இருக்க முடியும் மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளின் கீழ் இருந்தாலும் ஒருவர் வெற்றிபெற என்ன செய்யவேண்டும்? என்பன குறித்து, டாக்டர் அசுதோஷ் ஷா கூறுவது இதுதான்..
நன்றாக உண்ணுங்கள்: பாரம்பரியமாக சமைத்த சமச்சீரான உணவுகள் இதயத்திற்கு ஆரோக்கியமானவை. எனவே, இதை குறிப்பிட்ட நேர இடைவெளியில் சாப்பிடுங்கள். அரை வயிறுமட்டும் சாப்பிடுங்கள். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில் குறைந்தபட்சம் 12 மணிநேர இடைவேளி இருக்க வேண்டும். நீர் அதிகம் குடியுங்கள். அதிகப்படியான தேநீர், காபி அல்லது ஊக்க மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும். மதியம் 2 மணிக்குப் பிறகு தேநீர், காபி போன்றவற்றை உட்கொள்ளக்கூடாது.
நன்றாக உடற்பயிற்சி செய்யவும்: குழந்தைகள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தீவிர உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். பெரியவர்கள் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள், வேகமான நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது புகைபிடிப்பதற்கு சமமான உடல்நல அபாயத்தைக் கொண்டுள்ளது. எனவே கழுத்து, முதுகு, கை மற்றும் கண்கள் சோர்வடைவதைத் தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அவ்வப்போது எழுந்து, உங்கள் உடலை நீட்டி நகர்த்தவும்.
நன்றாக தூங்குங்கள்: தூக்கம் என்பது உங்கள் மூளையையும் உடலையும் சரிசெய்து மீட்டெடுக்கும் முக்கியமான ஒன்றாகும். சூரிய அஸ்தமனம் ஆகி 3 மணி நேரத்திற்குப் பிறகு தொடங்கும் 9 மணிநேர தடையற்ற தூக்கம் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு குறைந்தபட்சம் 7-9 மணிநேரம் தடையற்ற தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. மூளையிலும் உடலிலும் பகலில் உருவாகும் நச்சு ரசாயன துணைப் பொருட்களை தூக்கம் நீக்குகிறது. இந்த துப்புரவு செயல்பாட்டில் ஏதேனும் குறுக்கீடு இருந்தால், அது மூளை மற்றும் உடலின் செயல்பாட்டை பாதிக்கிறது. மன அழுத்தத்தைச் சமாளிக்க உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் டிவி, மொபைல், கணினி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும்.
உங்கள் மூளை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து விலகி இருங்கள்: ஆல்கஹால், நிகோடின், கஞ்சா, கோகோயின், ஓபியாய்டுகள், ஆம்பெடமைன்கள் மற்றும் செயற்கை மருந்துகள், தூக்க மாத்திரைகள் (ஆல்ப்ராக்ஸ், ரெஸ்டில், அமைதி, சோல்ஃப்ரெஷ், நைட்ரெஸ்ட் மற்றும் பிற பென்சோடியாசெபைன்கள்) ஆகியவற்றில் இருந்து விலகி இருங்கள்.
நல்ல ஆரோக்கியத்தைப் பேணுங்கள்: உங்கள் வயதுக்கு ஏற்றவாறு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுங்கள். உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் போன்ற ஏதேனும் நோய் இருந்தால், கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும்.
உங்கள் நேரத்தையும் செயல்பாடுகளையும் ஒதுக்குங்கள்: தினமும் - 8 மணிநேர தூக்கம், 8 மணிநேர வேலை, வீட்டு வேலைகளுக்கு 2 மணிநேரம், குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு 2 மணிநேரம் (குடும்பமாக சேர்ந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவையாவது சாப்பிடுங்கள்), பயணத்திற்கு 2 மணிநேரம் மற்றும் 2 மணிநேரம் சுய தேவைகளுக்கு எனப் பிரித்துக் கொள்ளுங்கள் (பொழுதுபோக்கு, விளையாட்டு, உடற்பயிற்சி, வீட்டுப்பாடம்).
விடுமுறையில் வேலை செய்யாதீர்கள்! வாழ்க்கையிலும் வேலையிலும் யதார்த்தமான மற்றும் அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும். வேலையில் இலகுவான பணிகளை முதலில் முடியுங்கள். அவசரப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அடுத்து, உங்கள் தொழில்முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியமான மற்றும் அவசரமற்ற பணிகளில் கவனம் செலுத்துங்கள். முக்கியமற்ற மற்றும் அவசரமில்லாத பணிகளைப் புறக்கணிக்கவும்.
மிக அவசர மற்றும் முக்கியமான பணிகளுக்குப் பிறரின் உதவியை நாடுங்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால், அதைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள். பின்னர் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் என்ன என்பதைக் கண்டறிந்து,அதைத் தீர்க்க கவனம் செலுத்துங்கள். வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உள்ள சிக்கல்களைத் தீர்க்க குழுப்பணி தேவை என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேற்கூறிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தாலும், சிலரின் செயல்பாட்டுத்திறன் குறைந்தால், ஒரு மனநல மருத்துவரை அணுக தயங்கக்கூடாது.
பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்துகள் உள்ளன. அவை படிப்படியாக தனிநபரின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகின்றன.
மன அழுத்தம் உங்கள் எதிரி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மன அழுத்த சூழ்நிலைக்கு நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது’’என மருத்துவர் கூறி முடித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்