உடல் எடையைக் குறைக்க மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த 7 ஸ்மார்ட் வழிகளைப் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடல் எடையைக் குறைக்க மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த 7 ஸ்மார்ட் வழிகளைப் பாருங்கள்!

உடல் எடையைக் குறைக்க மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த 7 ஸ்மார்ட் வழிகளைப் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 05, 2025 07:00 AM IST

உங்கள் உடல் எடையைக் குறைக்க மஞ்சளை எப்படி பயன்படுத்தவேண்டும்?

உடல் எடையைக் குறைக்க மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த 7 ஸ்மார்ட் வழிகளைப் பாருங்கள்!
உடல் எடையைக் குறைக்க மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த 7 ஸ்மார்ட் வழிகளைப் பாருங்கள்!

மஞ்சள் டீ

உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மஞ்சள் தேநீரை நீங்கள் பருகவேண்டும். ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் மஞ்சள் தூளை கலந்து, அதில் துளி எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பருகவேண்டும். புத்துணர்ச்சி நிறைந்த இந்த பானம் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும்.

மஞ்சள் கழிவுநீக்க பானம்

தண்ணீரில் இஞ்சி, மஞ்சள் மற்றும் எலுமிச்சையை சேர்த்து ஊறவைத்து பருகவேண்டும். இது உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்கள் உடலின் வளர்சிதைக்கு உதவுகிறது.

மஞ்சள் மற்றும் மிளகு கலவை

மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து நீங்கள் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். அதை ஆரோக்கிய கொழுப்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்துவைத்துக்கொண்டால் அதன் திறன் அதிகரிக்கும். இது உங்கள் உடல் குர்குமினை நன்றாக உறிஞ்ச உதவும். மஞ்சளில் உள்ள நல்ல உட்பொருட்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

மஞ்சள் மாத்திரைகள் அல்லது சப்ளிமென்ட்கள்

நீங்கள் எளிதாக மஞ்சளை உட்கொள்ள விரும்பினால், மஞ்சள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் அப்படியே மாத்திரை வடிவில் கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்துவது எளிது. எளிமையாக இந்த முறையைப் பின்பற்றி மஞ்சள் எடுத்துக்கொள்ளலாம். நல்ல பிராண்டில் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள். இதை சாப்பிடுவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு சாப்பிடுங்கள். அதுதான் நல்லது.

மஞ்சள் சேர்த்த உணவுகள்

நீங்கள் பருகும் சூப்கள், ஸ்ட்டூ மற்றும் குருமா ஆகியவற்றில் மஞ்சள் தூவி அதை சாப்பிடுங்கள். இதில் உள்ள தெர்மோஜெனிக் உட்பொருட்கள் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதை நீங்கள் உணவில் சேர்க்கும்போது உணவின் சுவையும் அதிகரிக்கும்.

மஞ்சள் ஸ்மூத்தி

காலையில் எழுந்து நீங்கள் பருகும் ஸ்மூத்தியில் நீங்கள் மஞ்சள் சேர்த்துக்கொண்டால், அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைத்தால் அது உங்களுக்கு நல்ல துவக்கமாக இருக்கும். இதை நீங்கள் கீரை, இஞ்சி, தேங்காய் தண்ணீர் அல்லது அன்னாசிப்பழம் என ஸ்மூத்தி செய்யும்போது, அது உங்கள் உடல் எடையைக் குறைக்கிறது. மேலும் சுவையாகவும் இருக்கும்.

மஞ்சள் எண்ணெய்

மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் நன்றாக ஊறவைத்து அதை உங்கள் சருமத்தில் தடவலாம். இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சருமத்தை இறுக்கமாக்கும் மற்றும் சருமத்தில் கொழுப்பை உருவாக்கும் உட்பொருட்களை குறைக்கிறது. இதனால் சருமம் நன்றாகவும் இருக்கும். தோற்றமும் அழகாகவும் இருக்கும்.

மஞ்சள் பால்

பாலில் மஞ்சள் கலந்து தினமும் இரவில் உறங்கச் செல்லும் முன் பருகினால், அது அவர்களின் செரிமானத்தை அதிகரிக்கும். வீக்கத்தைக் குறைக்கும். அதில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.