Mental Health:'அற்புதமான நண்பர்கள் கிடைத்தால் வெற்றிகள் குவியுமடா' - மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mental Health:'அற்புதமான நண்பர்கள் கிடைத்தால் வெற்றிகள் குவியுமடா' - மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது எப்படி?

Mental Health:'அற்புதமான நண்பர்கள் கிடைத்தால் வெற்றிகள் குவியுமடா' - மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது எப்படி?

Marimuthu M HT Tamil
Feb 25, 2024 09:13 AM IST

மனநலப் பிரச்னைகள் உள்ள நண்பரை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கான எளிய, பயனுள்ள வழிகாட்டியைப் பாருங்கள்.

மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது எப்படி?
மனச்சோர்வில் இருக்கும் நண்பனை மீட்டெடுப்பது எப்படி? (Photo by Joseph Pearson on Unsplash)

உங்கள் நண்பன் மனதளவில் சோர்வுடனும், மனநலப் பிரச்னைகளுடனும் இருந்தால் அவர்களை மீட்டெடுப்பது உங்கள் தலையாயப் பணி என்பதை உணர்ந்து நடத்தல் வேண்டும். அவர்கள் மீது காட்டும் பச்சாதாபம், இரக்கம் ஆகியவை பிரச்னையைச் சரிசெய்ய உதவும்.

இதுகுறித்து மூத்த மனநல மருத்துவருமான டாக்டர் ஜோதி கபூர், மனநலப் பிரச்னைகள் கொண்ட ஒரு நண்பருக்கு எப்படி ஆதரவளிப்பது என்பது குறித்துப் பரிந்துரைகளை வழங்கியுள்ளார். அவையாவன:-

  1. ‘’முதலில் உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள்: மனநலப் பிரச்னைகளைக் கொண்ட ஒரு நண்பருக்கு ஆதரவளிப்பதற்கான முதல் படி, அவர்களுடைய நிலையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது. அவர்களின் பிரச்னைகளின் தன்மை, பொதுவான அறிகுறிகள் மற்றும் அணுகக்கூடிய சிகிச்சைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது பயனுள்ள ஆதரவை வழங்க உங்களுக்குத் தேவையான தகவல்களை உங்களுக்கு வழங்கும். அங்கீகரிக்கப்பட்ட மனநல அமைப்புகள், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் ஆதாரங்கள் மூலம் பல்வேறு மனநல நிலைமைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
  2. காதுகொடுத்து கேளுங்கள்: சில நேரங்களில் ஒரு நபருக்குத் தேவையானது மறு கருத்து தெரிவிக்காமல், அவர்கள் சொல்வதைக் கேட்க யாராவது ஒருவர் வேண்டும் என்பது தான். உங்கள் நண்பர், தங்கள் உணர்வுகளையும் கருத்துகளையும் தெரிவிக்க இடம் கொடுங்கள். குறிப்பாக, உடனடி தீர்வுகள் அல்லது ஆலோசனைகளை வழங்குவதைத் தவிர்க்கவும். வெறுமனே அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பது அவர்கள் சுமக்கும் சில உணர்ச்சி சுமைகளைக் குறைக்க ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
  3. பச்சாதாபம் மற்றும் புரிதலைக் காட்டுங்கள்: மனநலப் பிரச்னைகளைக் கையாளும் ஒரு நண்பருக்கு உதவும்போது பச்சாதாபம் மற்றும் புரிதல் அவசியம். அவர்களது சவால்கள் எப்போதும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவை உண்மையானவை என்பதை உணருங்கள். அவர்கள் மீது அனுதாபத்தை வெளிப்படுத்துவதன் மூலமும், அவர்கள் அனுபவிக்கும் சிரமத்தை ஒப்புக்கொள்வதன் மூலமும், அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும்.  
  4. நடைமுறையான ஆதரவைக் கொடுங்கள்: கடினமான நேரங்களில் கடினமாகத் தோன்றக்கூடிய, பிராக்டிக்கலான ஒத்துழைப்பை செய்ய உங்கள் நண்பருக்கு உதவுங்கள். சிகிச்சைகளுக்கு அவர்களுடன் செல்வது, அவர்களது அன்றாட கடமைகளுக்கு உதவுபவை ஆகியவை இதில் அடங்கும். இந்த உதவி அவர்களின் வாழ்க்கையில் சில பதற்றங்களைத் தணிக்கும். 
  5.  உரிய சிகிச்சைக்கு ஊக்குவிக்கவும்:  சிகிச்சையாளர்கள், உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் போன்ற மனநல வல்லுநர்கள் மனநல சவால்களை எதிர்கொள்ள தேவையான குறிப்பிட்ட உதவியை வழங்க பயிற்சி பெற்றவர்கள். பொருத்தமான ஆரோக்கிய பராமரிப்பு நிபுணரைக் கண்டறிய அவர்களுக்கு உதவுங்கள். அவர்களுடனான சந்திப்புகளுக்குத் திட்டமிடுங்கள்.
  6. பொறுமையாக இருங்கள்: மனநலப் பிரச்னைகளிலிருந்து மீள்வது என்பது பெரும்பாலும் பின்னடைவுகளுடன் கூடிய படிப்படியான செயல்முறையாகும். பொறுமையாகவும் புரிதலுடனும் இருப்பது மிகவும் முக்கியமானது. மேலும் சரிசெய்ய நேரம் எடுக்கும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். வழக்கமான ஆதரவையும் ஆறுதலையும் வழங்குங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல், நீண்ட காலத்திற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற கருத்தை வலுப்படுத்துங்கள்.
  7. பராமரிப்பு: மனநலப் பிரச்னைகளைக் கையாளும் ஒரு நண்பருக்கு உதவும்போது நிலையான தகவல் தொடர்புகளைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது நேரில் விசாரித்தல் மூலம் வழக்கமான முறையில் அவர்களைச் சரிபார்க்கவும். இது பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளுடன் வரும் தனிமை உணர்வைத் தணிக்க உதவுகிறது.
  8. அவர்களது தனிப்பட்ட விவகாரங்களுக்கு மதிக்கவும்: உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தாலும், உங்கள் நண்பரின் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் மதிக்க வேண்டும். சிலர் தங்கள் மன ஆரோக்கியத்தை பொதுவெளியில் உரையாற்றுவதில் சங்கடமாக இருக்கலாம். அவ்வாறு செய்ய அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. எப்போதும் அவர்களின் ஆறுதல் மற்றும் நல்வாழ்வுக்கு முதலிடம் கொடுங்கள்.’’ என்று டாக்டர் ஜோதி கபூர் பேசி முடித்தார். மேற்கண்ட செயல்பாடுகளில் இருப்பது, உங்கள் வழக்கமான இருப்பு மன ஆரோக்கியம் மற்றும் மீட்புக்கான பாதையில் அவர்களுக்கு உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.