தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Remove Pregnancy Stretch Marks

Stretch Marks Removal: பிரசவகால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் விரைவில் மறைய என்ன செய்ய வேண்டும்?

I Jayachandran HT Tamil
May 17, 2023 06:20 PM IST

பிரசவகால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் விரைவில் மறைய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

பிரசவகால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்
பிரசவகால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதேபோல் பெண்களின் அடி வயிற்றில், தொடை பகுதியில், இரண்டு தொடைகள் உரசும் இடங்களில் தழுப்பும் போன்ற மார்ஸ் இருக்கும். இவையும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் என அழைக்கப்படுகிறது.

இதுப்போன்ற ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்பட காரணம், அதிக எடை, ஸ்டெராய்டுகளின் பயன்பாடு, உடலில் அதிகம் கொழுப்பு சேர்வது. மருத்துவ உலகில் இவை ஸ்ட்ரை ரூப்ரே என்று அழைக்கப்படுகின்றன. இவை தற்காலிகமானவை.

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வீட்டு வைத்தியம்

1. கற்றாழை

அலோ வேரா இலையின் வெளிப்புற அடுக்கு அகற்றப்பட்டு, உட்புற ஜெல்லை மட்டும் அந்த புதியில் தடவ வேண்டும். பின்பு, இதை 2-3 மணி நேரம் கழித்து துடைத்து எடுக்கவும்.

2. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை அகற்ற பயன்படுகிறது. விர்ஜின் தேங்காய் எண்ணெய்யை அந்த பகுதியில் தடவி மசாஜ் செய்யவும். தேங்காய் எண்ணெய் சருமத்தை ஆழமாக ஹைட்ரேட் செய்கிறது.

3. சென்டெல்லா

இது ஒரு மூலிகை, இதன் அறிவியல் பெயர் Centella asiatica. இது கொலாஜனை உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டுகிறது. இதை பயன்படுவதன் மூலம் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை குறைக்கலாம்.

4. வைட்டமின் A

வைட்டமின் A சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இது ரெட்டினோல் என்ற பெயரில் பல தோல் பராமரிப்பு பொருட்களில் உள்ளது.வைட்டமின் A நிறைந்த அழகு சாதனப்பொருட்கள், கிரீம்கள், சீரம் ஆகியவற்றை இதற்கு பயன்படுத்தலாம்.

5. ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ஒரு சில ஆய்வுகள் கர்ப்ப காலத்தில் ஆலிவ் எண்ணெயைத் தவறாமல் பயன்படுத்துவது ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுவதைக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளது.

6. உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்களை ஒளிரச் செய்யப் பயன்படுகிறது. உண்மையில், உருளைக்கிழங்கு தோல் மற்றும் சாறு தீக்காயங்களால் ஏற்படும் வடுக்களை குறைக்க கூட பயனுள்ளதாக இருக்கிறது.

7. முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை நேரடியாக ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மீது தடவலாம்

WhatsApp channel

டாபிக்ஸ்