வயதானவர்களின் உடல் எடையைக் குறைக்கும் உணவு முறைகள்! உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் குறிப்புகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வயதானவர்களின் உடல் எடையைக் குறைக்கும் உணவு முறைகள்! உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் குறிப்புகள்!

வயதானவர்களின் உடல் எடையைக் குறைக்கும் உணவு முறைகள்! உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் குறிப்புகள்!

Suguna Devi P HT Tamil
Nov 27, 2024 09:29 AM IST

ஒருவருக்கு வயதாகி விட்டாலே அவர்களது உடலில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் என பல பிரச்சனைகள் வரிசைக் கட்டி வந்து விடுகின்றன. மேலும் வயதானவர்களும் உணவில் கட்டுப்பாடு இல்லாமல் தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடுகின்றனர்.

வயதானவர்களின் உடல் எடையைக் குறைக்கும் உணவு முறைகள்! உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் குறிப்புகள்!
வயதானவர்களின் உடல் எடையைக் குறைக்கும் உணவு முறைகள்! உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் குறிப்புகள்! (Istock)

உணவில் கவனம் 

வயதானவர்கள் உணவில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவர்களது உடலை எளிமையாக ஆரோக்கியமாக வைத்து நோய்களை விரட்டலாம். உடலின் அதிக எடையால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முதுகு வலி, மூட்டுவலி போன்ற நோய்கள் மோசமடையும். எனவே உங்கள் எடையைக் கட்டுப்படுத்துங்கள். முதலில் சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைக்க வேண்டும். அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.

சரியான காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவை உண்ணுங்கள். பால் மற்றும் பால் மூலம் செய்யப்பட்ட பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும். உடலின் அனைத்து தசை ஆரோக்கியத்திற்கு போதுமான புரதம் கிடைப்பது அவசியம். இறைச்சி, மீன், முட்டை மற்றும் பருப்பு வகைகள், பால், பீன்ஸ் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றிலிருந்து புரதத்தைப் பெறலாம்.

எல்லாம் சேர்ந்த உணவுப்பழக்கம் 

வயதானவர்கள் தங்களது உணவில் எல்லா விதமான சத்துக்களும் சீரான அளவில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.  குறைந்தபட்சம் தினமும் ஒரு பழத்தையாவது சாப்பிட வேண்டும். குறிப்பாக பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பழங்களை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முக்கிய உணவுக்கு இடையில் மட்டுமே பழங்களை சாப்பிட வேண்டும். கொய்யா, ஆப்பிள், பப்பாளி போன்றவற்றை உண்ணலாம். பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமாகும். அவை முன்கூட்டிய வயதைத் தடுக்கின்றன. உடல் எடை அதிகரித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். 

பிஸ்கட், இனிப்பு போன்றவற்றைக் குறைக்கவும். டீ, ஜூஸ் போன்றவற்றை சேர்த்து தினமும் 1.5-2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதய நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவை உள்ளவர்களுக்கு தண்ணீர் குடிப்பதில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.  எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை குறைந்தால் மருத்துவரை அணுகவும். புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. சுவாசத்தை எளிதாக்குகிறது. ஆயுட்காலம் அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பது உறுதியான ஒன்றாகும். இதனை பின்பற்றி நீங்களும் பயன் அடையுங்கள். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.