Eye ring: கருவளையத்தில் இருந்து மீள்வது எப்படி?
கருவளையத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்துக் காண்போம்.
சிலருக்கு கண்ணில் கருவளையம் வந்தால் சாதாரணமாகப் போவதில்லை. சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணமாக கருவளையம் நீண்டநாள் விருந்தாளியாக நமது கண்ணின் அடிப்பகுதியில் தங்கிவிடும்.
கருவளையம் வருவதற்கான சில காரணங்கள்?
கம்பியூட்டர், செல்போன் ஆகியவற்றினைப் பார்த்துக் கொண்டே அதிக நேரம் இருப்பதும்; உடலுக்குத் தேவையான சரியான தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் கருவளையம் வருவதற்கான முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. நீர் சரிவர குடிக்காமல் இருப்பது கண்களுக்கு, ரத்தத்தின் அளவை குறையச் செய்கிறது. இதனாலும் கருவளையம் ஏற்படுகிறது.
கருவளையத்தைக் குணப்படுத்துவது எப்படி?
மசாஜ்: கண்களை மூடியபடி அடிக்கடி அதனை கைகளைக்கொண்டு தடவிக்கொடுப்பதும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் சரிவிகித உணவுகளை உண்பதும் கருவளையத்தைக் குணப்படுத்த உதவும்.
வெண்ணெய்: வெண்ணெய் சிறிதளவு எடுத்து அதில் மஞ்சள் தூள் கலந்து கருவளையத்தின்மேல் அப்ளைசெய்ய, கருப்பு நிறம் நீங்கும்.
புதினா சாறு மற்றும் கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றி தடவி வர கருவளையம் நீங்கும். மேலும், எலுமிச்சை இலைகளின் சாறினை எடுத்து விளக்கெண்ணெய் மற்றும் தேன் கலந்து கலக்கி கண்ணிற்குக் கீழ் மசாஜ் செய்ய கருவளையம் நீங்கும்.
பால்: காய்ச்சாத பாலை ஒரு சிறு துணியில் தோய்த்து கண்களின் கீழ் ஒத்தடம் வைத்தால் கருவளையம் மறையும். வெள்ளரிக்காயை வெட்டி, கண்களின்மீது வைத்து ஓய்வு எடுத்தால் கருவளையம் நீங்கும்.
கருவளையம்: கருவளையம் வராமல் தடுக்க நாம் என்னதான் சிகிச்சை எடுத்தாலும் அவசியம் 8 மணிநேர தூக்கம் மிக முக்கியம். கணினி முன் வேலைபார்க்கும் நபர்கள், அடிக்கடி கண்களை சுத்தம்செய்துகொண்டே இருக்க வேண்டும். அதேபோல், கண்ணைச்சுற்றி அவ்வப்போது மசாஜ் செய்துகொண்டு இருப்பதும் நார்ச்சத்து நிறைந்த வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்பதும் கருவளையம் வராமல் இருக்கலாம். அதன்பின், இருளில் செல்போனை தூங்கும் போது பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்