Health Tip: ரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் சூப்பர் உணவுகள்
ரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் சூப்பர் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் இயக்கத்துக்கு அத்தியாவசியம் நமது ரத்தம். இந்த ரத்தத்தை இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை சுத்திகரிக்கின்றன. இருப்பினும் அதில் நச்சுப்பொருள்கள் சில தேங்கத்தான் செய்யும். இயற்கையான முறையில் சில உணவுகளை சாப்பிடுவதன்மூலம் ரத்தத்தை சுத்திகரிக்க முடியும்.
தொடர்ந்து மாதுளை உண்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தலாம். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. செரிமானத்தைச் சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.