வெயில் காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ..!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெயில் காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ..!

வெயில் காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil
Published Jun 29, 2025 01:39 PM IST

வெயில் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோடை காலத்தில் சருமத்திற்கு ஏற்ற சரியான பராமரிப்பு முறைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

வெயில் காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ..!
வெயில் காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ..!

கோடைக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவும் உதவிக் குறிப்புகள் இதோ!

கெமிக்கல் சோப்புகள்

வெயில் காலத்தில் அதிக கெமிக்கல் கலந்த சோப்புகளை தவிர்க்க வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இயற்கையான அல்லது ரசாயனம் குறைந்த சோப்புகளை பயன்படுத்துங்கள். தளர்வான பருத்தி ஆடைகள் அணிவது நல்ல பலனைத் தரும்.

கற்றாழை ஜெல்

புதிய கற்றாழை ஜெல்லை சூரிய ஒளி படும் இடங்களில் தடவவும். கற்றாழை ஜெல்லை வெப்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது வீக்கம் மற்றும் கருநிறத்தை குறைக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் இயற்கையான சில சிறப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஈரப்பதம், இலகுரக சூரிய பாதுகாப்புக்காக வெயிலில் செல்வதற்கு முன் உங்கள் தோலில் தேங்காய் எண்ணெயை தடவவும்.

சன்ஸ்கிரீன்

வெயில் காலத்தில் தோல் பராமரிப்பில் சன்ஸ்கிரீன் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சிறந்தது ஆகும். இதன் மூலம் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க இது உதவும்.

பால் மற்றும் தயிர்

பாலில் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தப் பாலைப் பயன்படுத்துவது சருமத்திற்கும் நன்மை பயக்கும். அதேபோல், தயிர் உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் தயிரை பயன்படுத்தலாம். தயிரை உங்கள் தோலில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருக்கவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.

வைட்டமின் சி உணவுகள்

வெயில் காலத்தில் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர், கேரட் ஜூஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.